Jailer: மதுபோதையில் போலீஸ் ஸ்டேஷனில் தகராறு செய்த ரஜினிகாந்த் பட வில்லன் விநாயகன் கைது?

நேற்று மது போதையில் இருந்தவர் எர்ணாகுளம் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் தகராறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்
Jailer: மதுபோதையில் போலீஸ் ஸ்டேஷனில் தகராறு செய்த ரஜினிகாந்த் பட வில்லன் விநாயகன் கைது?
Jailer: மதுபோதையில் போலீஸ் ஸ்டேஷனில் தகராறு செய்த ரஜினிகாந்த் பட வில்லன் விநாயகன் கைது? ட்விட்டர்

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியாகியுள்ளார்.

சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். இதில் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார்.

இவரது மிரட்டலான நடிப்புக்கு பெரும் புகழ்பெற்றார் விநாயகன். இந்நிலையில், நேற்று மது போதையில் இருந்தவர் எர்ணாகுளம் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் தகராறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்

காவல் ஆய்வாளர் பிராதபசந்திரன் கூறியதாக ஏ என் ஐ-ன் எக்ஸ் தளத்தில் வெளியான அறிக்கையில்,

“நடிகர் விநாயகன் தனது குடும்பப் பிரச்சினை தொடர்பாக காவல் துறையை அணுகினார். பிரச்சினை முற்றிய நிலையில், மது போதையில் இருந்தவர் காவல் நிலையத்தில் தகராறு செய்தார். மேலும் எர்ணாகுளம் காவல் நிலைய அதிகாரிகளை தாக்கி, பணிகளை செய்யவிடாமல் தடுத்தார்.

இதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு 10.30 மணியளவில் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்” என்றார்.

Jailer: மதுபோதையில் போலீஸ் ஸ்டேஷனில் தகராறு செய்த ரஜினிகாந்த் பட வில்லன் விநாயகன் கைது?
Mark Antony: U/A சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட தனிக்கை துறை? நடிகர் விஷால் குற்றச்சாட்டு

குடித்துவிட்டு தகராறு செய்த விநாயகனை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டது காவல் துறை.

பெயில் கிடைத்து வெளியான விநாயகன் சுய நினைவுக்கு வந்த நிலையில், தான் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதே தெரியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

“நான் இங்கு வழக்கு பதிவு செய்யவே வந்தேன். எதற்காக என்னை கைது செய்தனர் என்பதை கேட்டுச் சொல்லுங்கள்” என்று கூறினார் விநாயகன்.

நடிகருடன் மருத்துவமனையில் இருந்த காவல் அதிகாரி, நிருபர்களிடம் கூறியதாவது,

”விநாயகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக அவர் காவல் துறைக்கு தகவல் அளித்திருந்தார். இது குறித்து பேச அவரது இல்லத்திற்கு சென்றோம். அதன் பிறகே தகராறு முற்றியது” என்றார்

ரஜினிகாந்த் பட நடிகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Jailer: மதுபோதையில் போலீஸ் ஸ்டேஷனில் தகராறு செய்த ரஜினிகாந்த் பட வில்லன் விநாயகன் கைது?
Chandrababu Naidu: முன்னாள் ஆந்திர ஊழல் வழக்கில் கைது - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com