முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்திரா மாநிலத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த சமயத்தில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் அவரை சிஐடி போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் எம் எல் ஏவும் முன்னாள் அமைச்சருமான கண்ட்டா ஸ்ரீனிவாச ராவ் மற்றும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் 2021ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுசெய்யப்பட்டது. அதில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் குற்றவாளியாக தற்போது கண்டறியப்பட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டுக் கழகம் (APSSDC)ன் கீழ், மாநிலத்தில் இருக்கும் வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்படுத்தி வேலை பெற உதவுவதாக கூறி ரூ. 371 கோடி ஊழல் செய்ய சந்திரபாபு நாயுடு உறுதுணையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
வழக்கு குறித்த ஆவணங்களை சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர்களிடம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் முதல் தகவல் அறிக்கையில் முன்னாள் முதல்வரின் பெயர் இல்லை என்பதை சுட்டிக்காட்டினர்.
இதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் முழுமையான தகவல்களுடைய அறிக்கையை வழங்குவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரை கைது செய்ய சிஐடி போலீசார் அதிகாலை 3 மணியளவில் சென்ற நிலையில், அவரது பாதுகாவலர்கள் போலீசாரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.அதனால் காலை 6 மணிக்கு கைது செய்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவை கைது செய்ததற்கு அவரது கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரது மகன் நரா லோகேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆந்திரபிரதேச பாஜக தலைவர் டக்குபாட்டி புராண்டேஸ்வரி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 50(1)(2) பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust