Avatar 2 : இணையத்தில் கசிந்த அவதார் 2 டிரெய்லர் - படக்குழுவினர் அதிர்ச்சி

மே 6 ஆம் தேதி அவதார் 2 படத்தின் டீசர், டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியான நிலையில் டிரெய்லர் முன்கூட்டியே எந்த ஒரு அறிவிப்பும் இன்றி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Avatar 2
Avatar 2Twitter
Published on

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகிப் பலத்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அவதார். ரூ.1,500 கோடி பட்ஜெட், 3 டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

முதல் பாகத்தின் வெற்றி அமோகமாகக் கிடைத்ததால் கடந்த- 2016 ஆம் ஆண்டு “அவதார் 2” படத்தை 5 பாகங்களாக எடுக்கப் போவதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.

Avatar 2
Avatar 2Twitter

அவதார் 2 - ரிலீஸ் தேதி 16, 2022 டைட்டில்: The Way of Water

அவதார் 3 - ரிலீஸ் தேதி 20, 2024 டைட்டில்: The Seed Bearer

அவதார் 4 - ரிலீஸ் தேதி 18, 2026 டைட்டில்: The Tulkun Rider

அவதார் 5 - ரிலீஸ் தேதி 22, 2028 டைட்டில்: The Quest for Eywa

Avatar 2
Avatar 2Twitter

தற்போது அவதார் 2 படத்தை இந்தாண்டுக்குள் வெளியிடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உருவாகி வரும் அவதார் 2 படத்தை உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படத்துக்கு “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” (Avatar: The Way of Water) என்று பெயரிட்டுள்ளனர்.

மே 6 ஆம் தேதி இந்தப் படத்தின் டீசர், டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியான நிலையில் டிரெய்லர் முன்கூட்டியே எந்த ஒரு அறிவிப்பும் இன்றி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Avatar 2
சைலண்ட் மோடுக்கு மாறிய ஷபானா - ஆர்யன் ஜோடி - காரணம் இதுதானா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com