இன்டர்நெட் உலகில் எல்லாருமே ஸ்டார்ஸ் தான். எந்த தகுதியும் அவசியம் இல்ல. ஏதோ ஒரு வகையில் மக்களை என்டெர்டயின் செய்ய முடிந்தால், அவர்களின் நாளை பாஸிடிவாக மாற்ற முடிந்தால், முகத்தில் புன்னகை மலரச் செய்தால், இதயத்தை லேசாக்கினால் யார் வேண்டுமானாலும் ஸ்டாராகிவிட முடியும்.
அப்படிப்பட்ட ஒரு லிட்டில் சூப்பர் ஸ்டார் தான் (அதான் சிம்பு வளந்துட்டாரே) நம்ம ஜனனி பாப்பா!
ஜனனிமா யூடியூப் சேனலை பாசிடிவிட்டி தொழிற்சாலை என்றே சொல்லலாம்.
வீட்டில் ஒரு குழந்தை வந்தால் மொத்த வீடுமே மகிழ்ச்சியானதாக மாறிவிடும். ஜனனி, ஒரு குழந்தையே பலரது மொபைலுக்குள் நுழைந்து வீடுகளை மகிழ்ச்சியானதாக மாற்றி வருகிறார்.
இந்த ஐந்தரை வயது நாயகிக்கு இன்ஸ்டாவில் 2லட்சம், யூடியூபில் 2 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்பாவிடம் சென்று தானே செய்த சேட்டைகளை, அம்மா அல்லது அண்ணன் செய்பவற்றை மழலை மொழியில் கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தார் ஜனனி!
அவரது வாலுத்தனமும், குறும்புத்தனமும் குழந்தைத் தனம் ஊறிய அதட்டலும்,கொஞ்சலும்,கெஞ்சலும், பாடலும் பார்க்க பார்க்க... பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
தனது மகள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களை மொபைலில் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறார் ஜனனியின் தந்தை கார்த்தி. இரவில் அவரும் மனைவியும் அந்த வீடியோக்களை திரும்பப் பார்த்து மகிழ்ச்சியாகவும் பாசிடிவாகவும் உணர்ந்திருக்கின்றனர்.
இந்த பாசிடிவிட்டி நம்ம நண்பர்களுக்கும் கிடைக்கட்டுமே என வீடியோக்களை சமுக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார் கார்த்திக் அதற்கு கிடைத்த வரவேற்பு தான் இப்போதிருக்கும் ஃபேன்டம்!
நீங்க jananima Official சேனலின் சப்ஸ்கிரைபர் இல்லை என்றாலும் கூட ஜனனி அவங்க அம்மாவை கம்ப்ளைட் பண்ற வீடியோவைப் பார்த்திருப்பீர்கள். அவ்வளவு வைரல் ஆனது அந்த வீடியோ!
இவ்வளவு க்யூட்டான குழந்தை நம்ம வீட்டில் இருந்தால் அத்தை மாமாவில் தொடங்கி ரெண்டு விட்ட அண்ணன் தம்பி வரை எல்லாரும் கொஞ்சித் தீர்பார்கள் தானே அது போல தான் ஜனனிக்கும் சினிமா, சீரியல் என பல ஆஃபர்கள் வருகின்றன. எனினும் ஜனனி எதையும் சுமையாக கருதிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அவரது தந்தை ஒரே ஒரு படத்தில் மட்டும் ஜனனியை நடிக்க வைக்க இருக்கிறாராம். அதுவும் தனது நண்பரின் படம் என்பதால்!
இதைதவிர குழந்தைகள் பங்கேற்கும் எல்லா ரியாலிட்டி ஷோவிலும் நீங்கள் ஜனனியை பார்த்திருக்கலாம்!
ஜனனியின் அப்பா சென்னை - அம்மா கும்பகோணம் ஜனனியின் தமிழ் இரண்டு ஊர் பாஷயிலும் வராது. அது தான் மழலை மொழியாகிற்றே...
குழந்தைகளை விரும்பாதவர் யாருமில்லை என்பது உண்மை தான் என்பதற்கு ஜனனியின் வீடியோக்களுக்கு கீழ் வரும் கமன்ட்கள் தான் சாட்சி.
"நீங்கள் தான் உலகிலேயே கொடுத்து வைத்த தந்தை கார்த்தி"
"Bro you daughter soo cute her reaction will gives you relief from all stress god bless you da chellam"
"எனக்குக் குழந்தை இல்லை. உங்க குழந்தையைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு... வாழ்த்துறேன்!"
என அவ்வளவு பாசிடிவான கமன்ட்களும் வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் ஜனனிக்கு கிடைக்கும். இது தவிர எக்கச்சக்க லவ்யூக்கள், இதயங்கள் பறக்கும்.
நீங்கள் அந்த அம்மாவை கம்ப்ளைன்ட் செய்யும் வீடியோ கூட பார்த்ததில்லையா? மெய்யாகவா? இதோ பாருங்கள்...
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust