ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக SJ சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக SJ சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக SJ சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?Twitter

பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். 2014ல் ஜிகர்தண்டா படத்தை இயக்கியிருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் என பலர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகமான “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” தீபாவளி வெளியீடாக நவம்பர் 10ஆம் தேதி வெளியானது.

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், சத்யன், கபிலா வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வார இறுதியில் தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ் ஃபுல் ஆகி வருகிறது.

படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக SJ சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஜோவிகா முதல் கூல் சுரேஷ் வரை - பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா, இன்று நடிப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார்.

இப்படம் மெகா ஹிட் அடித்து எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பேசும்படியாக இருந்தது.

இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ் ஜே சூர்யா 5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. மார்க் ஆண்டனி படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா 3 கோடி வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக SJ சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
லால் சலாம் : கேமியோ ரோலுக்கு இத்தனை கோடியா? ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com