ஆம்பர் ஹெர்ட் வழக்கு வெற்றிக்கு பிறகு ஜானி டெப்பின் செல்வாக்கு அதிகரித்ததா?

ஜானி டெப்பின் பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படம் உலக மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டது. இதனால் இவருக்கு நாடு, மொழி கடந்து பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் அந்த வழக்கு அவரது மொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியது.
 ஜானி டெப்
ஜானி டெப்Twitter
Published on

ஜானி டெப் மீது அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் போட்ட அவதூறு வழக்கு சில வாரங்களுக்கு முன் நடந்து முடிந்தது.

உலகமே எதிர்பார்த்திருந்த அந்த வழக்கில் ஜானிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது ஜானி டெப் நிச்சயம் தோற்றுவிடுவார் என்று நம்பப்பட்டது.

இதனால் குடும்ப வன்முறையில் ஈடுபட்ட நபரை தங்கள் படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க முடியாது என பல நிறுவனங்கள் ஜானி டெப்பை கைவிட்டன.

2018-ம் ஆண்டில் ஒரு பத்திரிக்கையில் ஜானி டெப் குறித்து ஆம்பர் ஹெர்ட் மோசமாக எழுதியதால் அவர் பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் 6 வது பாகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜானி டெப்க்கு எதிரான மனநிலையே மொத்த ஹாலிவுட்டிலும் நிலவியது. ஆனால் அவரின் ரசிகர்கள் அவர் பக்கமே இருந்தனர்.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஜானி டெப். இவரின் பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படம் உலக மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டது. இதனால் இவருக்கு நாடு, மொழி கடந்து பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் இந்த வழக்கு அவரது மொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியது.

 ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட்
ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட்Twitter

ஜானி டெப் அந்த வழக்கை வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தனது வாழ்க்கையை நீதிபதிகள் திரும்பத் தந்துவிட்டதாக நெகிழ்ந்து பேசியிருந்தார் ஜானி.

ஆம்பர் ஹெர்ட்- ஜானி டெப்பின் இந்த வழக்கிற்கு முன்னும் பின்னும் ஜானி டெப்பின் செல்வாக்கில் மிகுந்த மாற்றம் இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக 90'ஸ் கிட்ஸின் ஆதர்ச நாயகனான ஜானி டெப் 2கே கிட்ஸ்களிடமும் முழுவதுமாக வந்து சேர்ந்திருக்கிறார். இதனை அவரது இன்ஸ்டாகிராமும் வெளிப்படுத்துகிறது.

 ஜானி டெப்
"ஆம்பர் ஹெர்ட் தான் உலகின் அழகான பெண்" - கிரேக்க முறை என்ன சொல்கிறது?

இந்த வழக்கை தொடங்குவதற்கு முன்பு 12 மில்லியனாக இருந்த ஜானி டெப்பின் இன்ஸ்டாகிராம் ஃபாளோவர்ஸ் எண்ணிக்கை வழக்கு விசாரணையில் 16.9 மில்லியனாக உயர்ந்தது. இப்போது 26.2 மில்லியனாக இருக்கிறது.

இத்துடன் இந்த வழக்கினால் ஜானி டெப் இழந்த படங்களையும் திரும்பப் பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக பிரான்சில் உள்ள டிஸ்னி லேண்டில் பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தின் படங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜானியை கேப்டன் ஜாக் ஸ்பேரோவாக மீண்டும் பார்ப்பது தான் ரசிகர்களின் எண்ணமுமாக இருக்கிறது.

pirates of the caribbean
pirates of the caribbeanTwitter

டிஸ்னி நிறுவனம் ஜானி டெப்பிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியதோடு அடுத்த பாகத்தில் நடிக்கக் கிட்டத்தட்ட 301 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 2,535 கோடி) அளவு ஒப்பந்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், வழக்கு நடந்த போது, "இனி 300 மில்லியன் டாலர்கள் கொடுத்தால்கூட டிஸ்னியின் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தில் நடிக்க மாட்டேன்" என்று ஜானி தெரிவித்திருந்ததையும் கவனிக்க வேண்டும்.

ஒருவேளை கேப்டன் இறங்கிவந்தால் பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் 6 களைகட்டும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

 ஜானி டெப்
“நான் ஜானி டெப்பை விடச் சிறந்தவன்” ஆம்பர் ஹெர்டை திருமணம் செய்ய சௌதி ஆசாமி விருப்பம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com