ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பை அவரது வழக்கறிஞரே Abuser என கூறியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2018ல் ஜானி டெப் தன்னை குடும்ப வன்முறைக்கு ஆளாக்கியதாக அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் ஜானி டெப் தனது முன்னாள் மனைவி மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை ஜானி டெப்பிற்காக வாதாடியவர் வழக்கறிஞர் கமீல் வாஸ்க். ஜானி டெப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வெளியான நிலையில் அவரது வழக்கறிஞரே ஜானியை abuser எனக் குறிப்பிடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளறியுள்ளது.
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய இந்த அவதூறு வழக்கு இரண்டு மாதங்கள் நீண்டு ஜூன் 1 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஆம்பர் தரப்பில் தான் குற்றம் என தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், ஜானி டெப்பிற்கு இழப்பீடாக 15 மில்லியன் டாலர்கள் வழங்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு ஆரம்பம் முதல் இறுதிவரை பதிவு செய்யப்பட்ட நிலையில் இறுதிக்கட்ட வீடியோ பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜானி டெப்பின் வழக்கறிஞர் கமீல், அவரது இறுதி வாதத்தில் ஒரு இடத்தில் டெப்பை வன்கொடுமையாளர் என கூறியது பதிவாகியுள்ளது.
அப்படிக் கூறிய மறுகணமே சுதாரித்துக்கொண்டு, டெப் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர் என தெரிவித்தார்.
தற்போது, அந்த வீடியோவை முன்னிட்டு ஆம்பர் ஹெர்டின் தரப்பினர் டெப்பின் வழக்கறிஞரே அவரை குற்றவாளியாக ஒப்புக்கொள்கிறார் எனக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வீடியோ இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜானி டெப் தன்னை குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கினார் என்றும், பாலியல் ரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதாக ஆம்பர் வாஷிங்க்டன் போஸ்டிடம் கூறியிருந்த நிலையில், பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் ஆறாவது பாகத்திலிருந்து படக்குழு டெப்பை நீக்கியது.
இத்திரைப்படத்தில் கேப்டன் ஜேக் ஸ்பாரோ என்ற கதாபாத்திரத்தில் டெப் நடித்திருந்தார். அது அவருக்கு உலகளாவிய ரசிகர் கூட்டத்தை தந்தது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust