ரஷ்யாவில் வெளியான கார்த்தியின் கைதி - 297 திரையரங்குகளில் ரிலீஸ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தை ரஷ்ய மொழியில் டப் செய்து இன்று வெளியிட்டுள்ளனர். கடந்த 2021ல் ஜப்பானில் 'கைதி டில்லி' என்ற பெயரில் இத்திரைப்படம் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது ரஷ்யாவிலும் வெளியாகியுள்ளது
Karthi
KarthiTwitter
Published on

கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் ரஷ்யாவில் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திற்கு பிறகு இரண்டாவதாக வெளியான திரைப்படம் கைதி.

கதாநாயகனாக கார்த்தி, மற்றும் முக்கிய தோற்றங்களில் நரேன், அர்ஜுன் தாஸ், விஜய் டிவி தீனா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம், அதன் ஆக்ஷன் காட்சிகளுக்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலகினர் பலரையும் கவர்ந்தது.

Karthi-Naren
Karthi-NarenTwitter

கொலை குற்றத்திற்காக சிறை வாசம் அனுபவித்துவிட்டு, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வரும் தன் மகளை காண ஏக்கத்துடன் காத்திருக்கிறான் டில்லி. அடைக்கலம் என்பவனின் கூட்டம் நடத்தும் போதை பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார் ஆய்வாளர் பிஜாய்.

அப்போது ஒரு பார்ட்டியில் இந்த கடத்தல் கும்பல் அனைத்து காவல் துறையினருக்கும் போதை மருந்து கலந்த ஆல்கஹாலை கொடுத்துவிட, இந்த வலையிலிருந்து தப்பித்த பிஜாய், காவல் துறையினரை மருத்துவமனையில் அனுமதித்து, போதை பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க டில்லியின் உதவியை நாடுகிறார்

உதவி புரிந்தால் டில்லி மீதிருக்கும் அனைத்து வழக்குகளும் நீக்கி, அவரை முழுமையாக விடுதலை செய்வதாக வாக்களித்து அழைத்து செல்கிறார் ஆய்வாளர். இந்த பயணத்தில் நிகழும் திரில்லிங் அனுபவங்கள், யார் இந்த அடைக்கலம், டில்லி எதற்காக கொலை செய்தான், கடைசியில் தன் மகளுடன் டில்லி இணைந்தானா என பல கேள்விகளுடன் நகர்கிறது படம்.


இத்திரைப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவை ஜப்பான் வரை கூட்டி சென்றது. 2021 நவம்பரில் ஜப்பானில் 'கைதி டில்லி' என்ற பெயரில் படம் வெளியானது. இந்நிலையில் இப்போது ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு இன்று மொத்தம் 121 நகரங்களில், 297 திரையரங்குகளில் வெளியாகிறது கைதி

Karthi
KGF 2: ஓடிடியில் வெளியானது யஷின் கேஜிஎஃப் 2 - விலை எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com