KGF 2: ஓடிடியில் வெளியானது யஷின் கேஜிஎஃப் 2 - விலை எவ்வளவு தெரியுமா?

கடந்த மாதம் 14 ஆம் தேதி திரைக்கு வந்து இந்தியளவில் வசூல் சாதனைகள் படைத்த கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம், ஒரு மாதக் காலத்திற்குப் பிறகு பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இதனை ரென்ட் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
KGF 2
KGF 2Twitter
Published on

கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 14ஆம் தேதி யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியானது. இதற்கு ஒரு நாள் முன்பு தளபதி விஜயின் பீஸ்ட் படம் வெளியாகியிருந்தது. எனினும், 4 வருடங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎஃப் முதல் பாகம், ரசிகர்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் சற்றும் குறையாமல் இருந்ததால், இதன் இரண்டாம் பாகத்திற்கான் வரவேற்பு இந்திய அளவில் படத்தை பெரிதும் வெற்றி பெறச் செய்தது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் திரைப்படம் வெளியாகி நடிகர் யஷ் மற்றும் கன்னட திரைத்துறையை உலகையே திரும்பிப் பார்க்க செய்தது. யஷ் ராக்கி பாய் ஆக நீங்கா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். இரண்டாம் பாகமும் எல்லா மொழிகளிலும் வெளியாகியிருந்தது

Yash
YashTwitter

இதனால் வெளிவந்த ஓரிரு நாட்களிலேயே பெறும் வசூல் சாதனை படைத்த திரைப்படம், இந்த ஒரு மாத காலமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கேஜிஎஃப் திரைப்படக் குழு பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமிடம் இதன் டிஜிட்டல் உரிமையை கொடுத்திருந்தது. முதல் பாகம் பிரைமில் இருப்பதை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகத்தையும் பிரைம் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

Yash
YashTwitter

திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களைத் தவிர, பிற படங்களுக்கு ஒரு மாத காலம் விண்டோ பீரியட் (Window Period) இருக்கும். அதாவது, படம் திரையரங்கில் வெளியாகி குறைந்தது ஒரு மாத காலம் வரை அதன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றவர்கள் அதை தங்கள் தளங்களில் வெளியிடக்கூடாது.

கடந்த மாதம் 14ஆம் தேதி கேஜிஎஃப் வெளிவந்த நிலையில், இப்போது திரைப்படம் அமேசான் பிரைமில் ரென்ட் செய்து பார்க்கும் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் வாடகை விலை 199 ரூபாய். இந்த படத்தின் ஓடிடி உரிமம் 320 கோடி ரூபாய் வரை விற்கப்படலாம் என ஊடகங்கள் கூறியிருந்தன.

KGF 2
எல் டொராடோ எனும் தங்க நகரம் உண்மையில் இருந்ததா? - ஒரு சாகச பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com