"பொன்னியின் செல்வன் படக்குழுவிற்காக விமானத்தை தாமதிக்க வைத்தார் தயாரிப்பாளர்" - கார்த்தி

பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக ’பொன்னி நதி’ பாடல் வெளியாகியிருக்கிறது. சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற வணிக வளாகத்தில் வைத்து இன்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் முன்னிலையில் இந்த பாடல் வெளியானது.
கார்த்தி
கார்த்தி Twitter
Published on

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இரண்டு பாகங்களாக பல்வேறு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

இதற்கிடையில் முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ponni nathi
ponni nathiponniyin selvan

பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக ’பொன்னி நதி’ பாடல் வெளியாகியிருக்கிறது.

சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற வணிக வளாகத்தில் வைத்து இன்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் முன்னிலையில் இந்த பாடல் வெளியானது.

இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் கலந்துக்கொண்டனர்.

கார்த்தி
பொன்னியின் செல்வன்: பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் குறித்த இந்த தகவல்கள் தெரியுமா?

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, முதலில் பாடல் எப்படி உள்ளது என்று பேச தொடங்கினார்.

பின்னர் இந்த பாடலை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

எல்லாரும் ஒரே இடத்தில் வந்து திரண்டு இந்த பாடல் வெளியீட்டை கொண்டாடியதற்கு நன்றி தெரிவித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தார் நடிகர் கார்த்தி.

தயாரிப்பாளர் சுபாஸ்கரன் குறித்து நடிகர் கார்த்தி நிகழ்ச்சியில் பேசினார். பொன்னியின் செல்வன் படக்குழு மலேசியாவில் இருந்து வருவதற்காக 15 நிமிடம் விமானத்தை தாமதம் செய்யும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்த சுபாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி பேசினார்.

கார்த்தி
பொன்னியின் செல்வன் : யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com