இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வெளியாகிறது. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் முதல் பாடல், நாளை வெளியாகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள இப்பாட்டுக்கு வரிகளை தொடுத்தவர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன். இவரது இயற்பெயர் இளங்கோவன்
மார்ச் 1979ல் கோவையில் பிறந்த இளங்கோ கிருஷ்ணன் ஒரு பட்டயக்கணக்காயர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளைச் சொந்த ஊரான கோயம்புத்தூரில் முடித்த இவர், முதலில் பட்டயக்கணக்காயர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். தற்போது இதழியலாளராக பணியாற்றிவருகிறார். இவர் விகடன் குழுமத்தில் நிருபராகவும் பணியாற்றினார்.
எழுத்தாளராகவும், கவிஞராகவும் பெயர்பெற்ற இளங்கோ, முதன் முறையாக திரைப்பட பாடலாசிரியர் என்னும் அவதாரத்தை பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் எடுக்கிறார்
நவீனக்கவிஞராக விளங்கும் இளங்கோ கிருஷ்ணன், அவரது கவிதைகளில் உருவகத்தன்மை, இசை தன்மை, மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகள் புகுத்துவது போன்றவற்றிற்காகப் பேசப்பட்டவர். மேலும் கவிதையின் அழகியல் கோட்பாடுகள் பற்றிய விவாதங்கள், மற்றும் விமர்சனங்கள் செய்பவர்.
கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுத துவங்கியிருந்தார். 2003-2005 வரை இவர் எழுதிய கவிதைகள் தொகுப்பாக 2007ஆம் ஆண்டு 'காய சண்டிகை' என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது
காய சண்டிகை, பட்சியின் சரிதம், பஷீருக்கு அயிரம் வேலைகள் தெரியும், வியனுலகு வதியும் பெருமலர், மருதம் மீட்போம்
தேவமகள் அறக்கட்டளை விருது, சென்னை இலக்கிய விருது, வாசக சாலை விருது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust