KGF 2 : ஆர்சிபி அணிக்காக திரையிடப்பட்ட கேஜிஎஃப் 2 - வைரல் க்ளிக்ஸ்

ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் வெளியே செல்ல முடியாததால், கேஜிஎஃப் 2 திரைப்படத்தை ஹோட்டல் லாபியில் திறந்தவெளியில் பார்க்க பெங்களூரு அணி நிர்வாகமும், படத்தின் தயாரிப்பு நிறுவனமும் ஏற்பாடு செய்தது.
RCB
RCB Twitter
Published on

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யாஷ் நடிப்பில் உருவான 'கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக வெளியானது.

இந்த 10,000 திரையரங்குகளில் தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. வெளியான முதல் நாளே வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

KGF 2
KGF 2Twitter

தமிழகத்திலும் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, வட இந்தியாவிலும் வசூலில் சாதனைகளை கேஜிஎப் 2 படைத்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் வெளியே செல்ல முடியாததால், கேஜிஎஃப் 2 திரைப்படத்தை ஹோட்டல் லாபியில் திறந்தவெளியில் பார்க்க பெங்களூரு அணி நிர்வாகமும், படத்தின் தயாரிப்பு நிறுவனமும் ஏற்பாடு செய்தது. இந்தப் படத்தை விராட் கோலி, தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

RCB
சண்டிகர் : ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு ரூ.15 லட்சம் கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய நபர்
RCB
KGF 2 vs Beast : இது தமிழருக்கு அழகல்ல - பேரரசு

இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான hombale films நிறுவனம் சமூகவலைதளத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com