லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை வேண்டும்; நீதிமன்றத்தில் மனு - என்ன காரணம்?

லியோ படம் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளானதால் ரூ. 1000 வழங்க வேண்டும் என மனுதாரர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படக்குழு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய நீதிமன்றத்தில் மனு - என்ன காரணம்?
லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய நீதிமன்றத்தில் மனு - என்ன காரணம்?twitter

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'லியோ'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் லியோ படம் அதிக வன்முறை உள்ள படம் எனவும், அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்புவதைத் தடை செய்யக் கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், போதை பொருள் பயன்பாடு, பெண்கள் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தியுள்ளார். லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

லியோ படம் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளானதால் ரூ. 1000 வழங்க வேண்டும் என மனுதாரர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படக்குழு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய நீதிமன்றத்தில் மனு - என்ன காரணம்?
LEO: ”ஒரு டயலாக்கை தூக்கிட்டோம்” லியோவா?பார்த்திபனா? விளக்கம் கொடுக்கும் இயக்குநர் லோகேஷ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com