LEO: ”ஒரு டயலாக்கை தூக்கிட்டோம்” லியோவா?பார்த்திபனா? விளக்கம் கொடுக்கும் இயக்குநர் லோகேஷ்

இந்நிலையில், படத்தின் பாதியிலேயே, அது பார்த்திபன் அல்ல, லியோ தான் என்று ரசிகர்களுக்கு கூறும் ஒரு வசனம் இடம்பெற்றிருந்ததாகவும், கடைசி நிமிடத்தில் அந்த டயலாக்கை அகற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
LEO: "நம்ம மக்களுக்கு படம் பண்ணுவோம்ன்னு விஜய் சொன்னார்" - லலித் குமார் சொன்ன சீக்ரட்!
LEO: "நம்ம மக்களுக்கு படம் பண்ணுவோம்ன்னு விஜய் சொன்னார்" - லலித் குமார் சொன்ன சீக்ரட்!Twitter

லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருந்தும், வார இறுதிகளில் தியேட்டர்களில் ஃபுல் ஷோ ஓடிக்கொண்டிருக்கிறது.

லியோ திரைப்படம் வெளியான பின்னர், விமர்சகர்கள், ரசிகர்களின் கேள்வியாக இருந்தது, பார்திபன் லியோ தான் என்றால், த்ரிஷாவிடம் ஏன் இல்லை என்று கூறவேண்டும்?

அத்தனை பேர் வந்து ”நீ தான் லியோவா?” என்று இரண்டாம் பாதி முழுக்க கேட்டுக்கொண்டிருந்தது கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக இருந்தது என்பதும் ஒரு சிலரது கருத்து.

படத்தின் கிளைமாக்சில், பார்த்திபன் “நான் தான் லியோ” என்று தானே ரிவீல் செய்யும் வரை, ஒரு விதத்தில் ரசிகர்களுக்கும் அந்த கேள்வி இருக்க தான் செய்தது.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் பேசிய வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. படத்தின் பாதியிலேயே, அது பார்த்திபன் அல்ல, லியோ தான் என்று ரசிகர்களுக்கு கூறும் ஒரு வசனம் இடம்பெற்றிருந்ததாகவும், கடைசி நிமிடத்தில் அந்த டயலாக்கை அகற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

திரைப்படத்தில், மன்சூர் அலி கான் லியோ குறித்த ஃபிளாஷ் பேக் ஒன்றை கூறுவார். அதன் தொடக்கத்தில், “எல்லா கதைக்கும் பலருக்கு வெவ்வேற perspective இருக்கும். இது என்னோட perspective” என்று அந்த டயலாக் இருந்ததாம்.

LEO: "நம்ம மக்களுக்கு படம் பண்ணுவோம்ன்னு விஜய் சொன்னார்" - லலித் குமார் சொன்ன சீக்ரட்!
LEO (No Spoilers): LCU என்பது என்ன? விஜய் எப்படி அதில் இடம் பிடிக்கிறார்?
Leo
LeoTwitter

இந்த வசனத்துடன் தொடங்கினால், அடுத்த 20 நிமிடங்களில் பேசப்படுவது பொய் என்பது தெரிந்துவிடும். மேலும், படம் பார்க்கிறவர்களுக்கும் லியோவா பார்த்திபனா என்ற குழப்பம் இருக்கட்டும் என்பது படக்குழுவின் முடிவாக இருந்தது என்றும் கூறினார் லோகேஷ் கனகராஜ்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

LEO: "நம்ம மக்களுக்கு படம் பண்ணுவோம்ன்னு விஜய் சொன்னார்" - லலித் குமார் சொன்ன சீக்ரட்!
LEO படம் எப்படி இருக்கு? மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com