கடந்த வாரம் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான கன்னட படம் சார்லி 777 திரைப்படம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. காரணம், இந்த திரைப்படம் ஒரு மனிதனுக்கும் அவனுடைய செல்ல பிராணியான நாய்க்கும் நடக்கும் ஒரு கதை என்பதால் தான். இந்நிலையில், இந்த படத்தை பார்த்துவிட்டு கர்நாடகா முதலமைச்சர் தனது நாய்குட்டியின் நியாபகம் வந்ததால் கதறி அழுத சம்பவம் அனைவரையும் மனதளவில் பாதித்துள்ளது.
கடந்த ஜூன் 10 ஆம் தேதி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் 777 சார்லி படம் வெளியானது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது. பொதுவாகவே, நம் மக்களிடையில், அதிலும் குறிப்பாக இந்த தலைமுறையினர், மனிதர்களை விட அவர்களது செல்ல பிராணிகள் மீது தான் அதீத காதல் கொண்டுள்ளனர் என்றால் அதை யாரும் மறுக்கமாட்டோம்.
ஒரு சிறு குழந்தை எப்படி நம் வாழ்வில் வந்தால், அதற்காக நம்மை முழுவதுமாக மாற்றிக்கொள்வோமோ, அது போல தான் செல்ல பிராணிகளும். அதிலும் நாய் குட்டிகளென்றால் மக்களுக்கு கொள்ளை பிரியம்.
அதை நாம் நமது குழந்தை போல தான் பாவித்து பார்த்துக்கொள்வோம். முக்கியமாக நாய்குட்டிகள் மனிதனின் தனிமையை, மனிதனின் மன அழுத்தம், மனவுளைச்சல்களை அகற்றிட ஒரு சிறந்த துணை என பலரும் சொல்லுவார்கள்.
நம்முடன் இருந்து நம்மை மகிழ்ச்சியாக மட்டுமே பார்த்துக்கொள்வதை அவர்களது கடமையாக நாய்கள் செய்யும். நாய்களை போல நம் மீட்து பாசம் பொழிய வேறு யாராலும் முடியாது. இது மிகைப்படுத்தும் வாக்கியமல்ல என்பதை நாய் குட்டிகளை வலர்ப்பவர்களிடம் கேட்டால் தெரியும்.
அப்படி தனிமையடைந்த ஒருவனது வாழ்வில் வரும் நாய்குட்டி, அவன் வாழ்வை எப்படி மாற்றுகிறது, அவனுள் புதைந்த உணர்வுகளை வெளிகொணர செய்யும் படமாக சார்லி 777 படமாக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த பலரும், மனதை கனக்க செய்யும் அழகான, அமைதியான திரைப்படம் என்று புகழ்ந்தும் வந்தனர்.
இந்நிலையில், படத்தை பார்த்த கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்கலங்கிய சம்பவம் இணையதளத்தில் மிகவும் பேசபட்டு வருகிறது. சார்லி 777 ஐ பார்த்த பொம்மை, தனது நாய்குட்டியின் நியாபகம் வந்ததால் எமொஷனல் ஆகி, கண்ணீரை அடக்க முடியவில்லை என்று மனமுடைந்தார்.
"If you are lucky, a dog will come into your life" என்ற வசனம் டிரெய்லரில் இடம்பெற்றதிலிருந்து நாய் பிரியர்கள் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
"நாய்களைப் பற்றிய திரைப்படங்கள் வந்துள்ளன, ஆனால் இந்த படம் விலங்குகளுடனான நம் உணர்ச்சிகளை இனிமையாக்கும் வண்ணம் உள்ளது. இதில் நாய் தனது உணர்ச்சிகளை அதன் கண்களின் மூலம் வெளிப்படுத்துகிறது. படம் நன்றாக இருக்கிறது, எல்லோரும் அதைப் பார்க்க வேண்டும்" என்ற பொம்மை, "நான் நிபந்தனையற்ற அன்பைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். நாயின் அன்பு என்பது நிபந்தனையற்ற அன்பு, இது தூய்மையானது" என்று கூறினார். அவர் கண்கலங்கிய புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலான நிலையில், தெருநாய்களை தத்தெடுக்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் தற்போது அறிவித்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust