விக்ரம்: லோகேஷை வீட்டுக்கு அழைத்த சிரஞ்சீவி, பாராட்டிய சல்மான்கான்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. எங்களை அழைத்தமைக்கு நன்றி சிரஞ்சீவி சார் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
kamal - lokesh
kamal - lokeshTwitter

கோலிவுட்டில் தனித்துவமான ஸ்கிரீன்பிளேயில் படங்களை எடுத்து தனி ரசிகர் பட்டாளமே உருவாகியவர் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இடம் பிடித்தார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக, கமலுடன் இணைந்து விக்ரம் படத்தை உருவாக்கினார்.

'விக்ரம்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் விக்ரம் படத்தைப் பாராட்டினர்.

kamal - lokesh
விக்ரம் : டிரண்டாகும் Rolex - கமல் சூர்யாவுக்கு பரிசளித்த இந்த வாட்ச்சில் என்ன ஸ்பெஷல்?

அந்த வகையில் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி, கமல்ஹாசனையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் தனது வீட்டிற்கு அழைத்துப் பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து, சிரஞ்சீவி தனது டிவிட்டர் பக்கத்தில் எனது அன்புக்குரிய பழைய நண்பரான கமல்ஹாசனைப் பாராட்டுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து சிரஞ்சீவி பாராட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. எங்களை அழைத்தமைக்கு நன்றி சிரஞ்சீவி சார் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்புக் குறித்து கமல்ஹாசனும் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

kamal - lokesh
ஏஜெண்ட் டீனா : விக்ரம் திரைப்படத்தில் தெறியாய் இருந்த இந்த Agent Tina யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com