லியோ படத்தில் நடிக்கிறாரா லெஜண்ட் சரவணன்? இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ
லியோ படத்தில் நடிக்கிறாரா லெஜண்ட் சரவணன்? இணையத்தை ஆக்கிரமித்த வீடியோTwitter

Legend in Leo? விஜய் படத்தில் நடிக்கிறாரா சரவணன் அருள்; பரவும் தகவல்கள் - உண்மை என்ன?

லெஜன்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சரவணன் அருள் தற்போது காஷ்மீரில் இருப்பதாக ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Published on

லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததால், அவரும் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடிக்கிறாரா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதமேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மூணாறில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஒட்டுமொத்த பட குழுவும் காஷ்மீருக்கு சென்றது.

லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருவதால் அங்கு இருந்து எந்த பிரபலங்கள் புகைப்படங்களை பதிவிட்டாலும் அப்படத்தில் நடிப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன.

சமீபத்தில் கூட டிக் டாக் பிரபலம் அமலா ஷாஜி காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தார். அவர் லியோ படத்தில் நடிப்பதற்காக தான் அங்கு சென்றுள்ளதாக வதந்தி பரவியது.

லியோ படத்தில் நடிக்கிறாரா லெஜண்ட் சரவணன்? இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ
Amala Shaji : பிரியங்கா மோகனை விட அதிக Followers; யார் இந்த 2K கிட்ஸ்லின் Reels க்ரஷ் ?

இந்நிலையில் தற்போது அதே போன்று லெஜண்ட் சரவணன் காஷ்மீருக்கு சென்றுள்ளதால் அவரும் லியோ படத்தில் நடிக்கிறாரா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

சரவணம் அருள் தனது ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவை பி.ஆர்.ஓ-ஒருவரும் பகிர்ந்ததால் எதிர்பார்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன.

லெஜன்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சரவணன் அருள் தற்போது காஷ்மீரில் இருப்பதாக ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்தவுடன் அவர் LCU-வில் இணைகிறார் என்றும் லியோ படத்தில் நடித்து வருவதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியோ படத்தில் நடிக்கிறாரா லெஜண்ட் சரவணன்? இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ
Thalapathy67: ”இது 100% என்னோட படம்” - விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com