Leo ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சுட்டா போச்சி - விஜய் போஸ்டர் பின்னணி என்ன?

ஏற்கனவே நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தொண்டர்கள் இவ்வாறு போஸ்டர்களை ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
விஜய் : ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சுட்டா போச்சி- வைரல் போஸ்டர் பின்னணி என்ன?
விஜய் : ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சுட்டா போச்சி- வைரல் போஸ்டர் பின்னணி என்ன?Twitter
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத்,பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்கவிருந்த நிலையில், ஆடியோ லாஞ்ச் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகப்படியான பாஸ்கள் கோரிக்கை எழுந்ததால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல்களால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் இதற்கு அரசியல் அழுத்தம் தான் காரணம் என சமூகவலைதளங்களில் கொந்தளித்து வந்தனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில், செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. "ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி என்ன நண்பா?" என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

ஏற்கனவே நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தொண்டர்கள் இவ்வாறு போஸ்டர்களை ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

விஜய் : ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சுட்டா போச்சி- வைரல் போஸ்டர் பின்னணி என்ன?
LEO : தளபதி விஜய் கடந்து வந்த 7 முக்கிய சர்ச்சைகள் - விரிவான தகவல்கள்| HBD Vijay

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ படத்தின் 2வது சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இனி தினமும் அப்டேட்ஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆடியோ லான்ச் நடைபெறாததால் விஜய் தரப்பில் இருந்து ஏதேனும் வகையில் புரமோஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பீஸ்ட் ஆடியோ லான்ச் நடைபெறாத நிலையில், விஜய்யின் நேர்காணல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விஜய் : ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சுட்டா போச்சி- வைரல் போஸ்டர் பின்னணி என்ன?
Vijay: "நான் அரசியலுக்கு வந்த பின்..." - நிர்வாகிகளிடம் விஜய் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com