Vijay: "நான் அரசியலுக்கு வந்த பின்..." - நிர்வாகிகளிடம் விஜய் பேசியது என்ன?

தேர்தல் அரசியல் நோக்கி விஜய் காலடி எடுத்து வைக்கிறார் எனப் பலரும் கருத்துகள் தெரிவித்துவரும் நிலையில், இந்த கூட்டத்திலும் விஜய் அரசியல் வருகைக் குறித்துப் பேசியுள்ளார்.
Vijay: "நான் அரசியலுக்கு வந்த பின்..." - நிர்வாகிகளிடம் விஜய் பேசியது என்ன?
Vijay: "நான் அரசியலுக்கு வந்த பின்..." - நிர்வாகிகளிடம் விஜய் பேசியது என்ன?Twitter

லியோ படத்தில் விஜய்க்கான அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டன என நேற்று தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் நடிகர் விஜய்.

எப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக கட்டமைத்துள்ளார். இதன் மூலம் மக்களுக்கு உதவுவது, சமூகத்தில் பொறுப்பான முறையில் பங்களிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 

பொதுவாக விஜய் பிறந்த நாள் போன்ற நாட்களில் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஊர் தோறும் உதவிகள் செய்யப்படுவது வழக்கம். கடந்த மாதம் 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் விஜய். 

இந்த நிகழ்வில் மாவட்ட வாரியாக இல்லாமல் தொகுதி வாரியாக நிகழ்ச்சிகளை நடத்தினார் விஜய். மேலும் மேடையில் அரசியல் தலைவர்கள் பற்றியும் பேசினார். 

தேர்தல் அரசியல் நோக்கி விஜய் காலடி எடுத்து வைக்கிறார் எனப் பலரும் கருத்துகள் தெரிவித்ததைக் காணமுடிந்தது. எனவே விஜய்யின் இந்த ஆலோசனைக் கூட்டம் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. 

Vijay: "நான் அரசியலுக்கு வந்த பின்..." - நிர்வாகிகளிடம் விஜய் பேசியது என்ன?
LEO : தளபதி விஜய் கடந்து வந்த 7 முக்கிய சர்ச்சைகள் - விரிவான தகவல்கள்| HBD Vijay

இந்த கூட்டத்திலும் விஜய் அரசியல் வருகைக் குறித்துப் பேசியுள்ளார். “அரசியலில் இறங்குவது என்றால் சினிமாவில் நடிக்க மாட்டேன்” என விஜய்க் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மேலும் மக்கள் இயக்க நிர்வாகிகள், “விஜய்யின் அரசியல் வருகைக்கான எல்லா கட்டமைப்புகளும் தயாராக இருக்கிறது. அவர் சரி என சொல்லிவிட்டால் அரசியலில் ஈடுபடுவோம்” எனக் கூறியதாக தகவல்கள் பரவுகின்றன.

அரசியலைப் பொறுத்தவரையில் அஜித், ரஜினி ரசிகர்களின்  ஆதரவும் கிடைக்கும் எனவும், விஜய்யுடன் எப்போது எந்த களத்திலும் உடன் இருப்போம் என்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர்.

Vijay: "நான் அரசியலுக்கு வந்த பின்..." - நிர்வாகிகளிடம் விஜய் பேசியது என்ன?
Senthil Balaji: 1996ல் திமுக தொண்டர், இன்று 3 துறைகளுக்கு அமைச்சர்- விறுவிறு அரசியல் பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com