Leo Leo Leo! : இன்று முதல் அப்டேட் - உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

திரைப்படம் குறித்த அப்டேட்கள் கேட்டு ரசிகர்கள் படக்குழுவினரை திக்குமுக்காட செய்து வந்தனர். இந்நிலையில், இது குறித்து வாய் திறந்திருக்கிறார் இயக்குநர்.
Leo Leo Leo! : இன்று முதல் அப்டேட் - உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்; உற்சாகத்தில் ரசிகர்கள்
Leo Leo Leo! : இன்று முதல் அப்டேட் - உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்; உற்சாகத்தில் ரசிகர்கள் twitter
Published on

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் அப்டேட் இன்று முதல் தொடங்கும் என உறுதி செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

நடிகர்கள் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளமே ஒன்று கூடும் திரைப்படம் லியோ. இது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஐந்தாவது திரைப்படம், மேலும் விஜய்யுடன் இவர் இணையும் இரண்டாவது படம்.

இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல் சி யு-வுக்குள் அடங்கும் என்பதால், இரட்டிப்பு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இதற்கு முன்னர் இவர் இயக்கிய கைதி, மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் எல் சி யு படங்கள்.

LEO: "நா ரெடி” வெளியானது தளபதி படத்தின் முதல் சிங்கிள்!
LEO: "நா ரெடி” வெளியானது தளபதி படத்தின் முதல் சிங்கிள்!ட்விட்டர்

திரைப்படம் குறித்த அப்டேட்கள் கேட்டு ரசிகர்கள் படக்குழுவினரை திக்குமுக்காட செய்து வந்தனர்.

இந்நிலையில், இது குறித்து வாய் திறந்திருக்கிறார் இயக்குநர்.

சமீபத்தில் நடந்த தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா ஒன்றில் இயக்குநர் லோகேஷுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது, விக்ரம் படத்திற்காக வழங்கப்பட்டது. அப்போதும் ரசிகர்கள் லியோ லியோ என ஆர்ப்பரிக்க தொடங்கினர் .

அப்போது பேசியவர், கடந்த வருடம் மாஸ்டர் படத்திற்கு இந்த வருடம் விக்ரம் படத்திற்கு விருது பெற்றுள்ளதாகவும், இதற்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார். தொடர்ந்து நிகழ்சசியை தொகுத்து வழங்கிய நடிகர் சதீஸ், "அடுத்த வருஷம் லியோவுக்கும் வாங்குவேன்னு சொல்லிட்டிங்கனா நல்லா இருக்கும்" என்றார்.

Leo Leo Leo! : இன்று முதல் அப்டேட் - உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்; உற்சாகத்தில் ரசிகர்கள்
Leo : சர்ச்சையில் சிக்கிய லியோ பட பாடல்; நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் - என்ன நடந்தது?

இதற்கு பதிலளித்த இயக்குநர் லோகி, "நிறைய வேல இருந்ததால அப்டேட் கொஞ்சம் லேட்டரா விடலாம்னு தான் பிளான். படம் ரிலீஸுக்கு 30 நாள் முன்னாடி இருந்து அப்டேட் குடுக்கலாம்னு இருந்தோம். எனக்கு தெரிஞ்சு நாளையில் (செப் 17) இருந்து அப்டேட் வருது" என்று கூறினார்.

லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநராக பணியாற்றிவரும் ரத்ன குமார் தனது எக்ஸ் தளத்தில் "நா ரெடி தா வரவா?" என தலைப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அடுத்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை, விஜய், சஞ்ச்ய தட், அர்ஜுன் உள்ளிட்டோருடைய கதாபாத்திரம் குறித்த தகவல்களை படக்குழு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Leo Leo Leo! : இன்று முதல் அப்டேட் - உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்; உற்சாகத்தில் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜின் Dream Project! - 'LEO'ஆயிரம் கோடி வசூலிக்குமா? அடுத்த படத்தில் ரஜினியா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com