LEO: ”இவன் வேட்டைக்கு சிதறணும் பயந்து” வெளியானது விஜய்யின் லியோ ட்ரெயிலர்!

இன்று லியோ படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

விஜய்யின் லியோ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேர் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிக்கும் படம் லியோ.

இந்த படத்தினை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது, அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

கடந்த 17ஆம் தேதி முதல், திரைப்படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வந்தன. வெளியாகும் அனைத்து மொழிகளின் போஸ்டர்கள், படத்தின் இரண்டாவது சிங்கிள், அர்ஜுன், த்ரிஷா மற்றும் சஞ்சய் தத்தின் போஸ்டர்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று லியோ படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கவிருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பாதுகாப்பு காரணங்கள் கருதி ரத்தானது குறிப்பிடத்தக்கது.

LEO: ”இவன் வேட்டைக்கு சிதறணும் பயந்து” வெளியானது விஜய்யின் லியோ ட்ரெயிலர்!
Jailer: வெளியானது Trailer - டைகர் முத்துவேல் பாண்டியனாக மிரட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினி!
logo
Newssense
newssense.vikatan.com