லியோ படத்தில் வனிதாவின் மகனா? வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி என்ன?

இந்த திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் நடிகை வனிதாவின் மகனான ஸ்ரீஹரி ஒரு காட்சியில் இடம் பிடித்திருக்கிறார்.
லியோ படத்தில் வனிதாவின் மகனா? வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி என்ன?
லியோ படத்தில் வனிதாவின் மகனா? வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி என்ன?Twitter

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. முதல் நாளே படம் வசூலில் சாதனையை செய்தது.

இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் என பலர் நடித்துள்ளனர்

இந்த திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் நடிகை வனிதாவின் மகனான ஸ்ரீஹரி ஒரு காட்சியில் இடம் பிடித்திருக்கிறார்.

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய், ஸ்ரீஹரி குழந்தையாக இருக்கும்போது அவரை மடியில் வைத்து எடுத்த புகைப்படம் ஒன்றை பயன்படுத்தி இருக்கின்றனர்.

அதாவது இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய், நடிகர் அர்ஜுனிடம் நான் லியோ இல்லை என்பதை நிரூபிப்பதற்காக புகைப்படம் சிலவற்றை காட்டுகிறார்.

அதில் தன்னுடைய மகனின் முதலாவது பிறந்தநாள் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை காட்டுகிறார். அது ஸ்ரீஹரியோடு விஜய் எடுத்த புகைப்படம் தான்.

லியோ படத்தில் வனிதாவின் மகனா? வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி என்ன?
Leo : ஜெயிலர் படத்தை மிஞ்சிய லியோ - முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வனிதாவுடன் விஜய் நடித்திருக்கிறார், அந்த சமயத்தில் வனிதாவின் மகனுடன் விஜய் புகைப்படம் எடுத்திருகிறார். இதற்கு முன்பே இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது.

தற்போது லியோ படத்தில் அந்த காட்சியில் புகைப்படம் இடம்பெற்றது, ரசிகர்களுக்கு ஸ்ட்ரைக்காகியுள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஸ்ரீஹரி சில குறும்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீஹரி தனது அம்மாவான வனிதாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறார். சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பதாக சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

லியோ படத்தில் வனிதாவின் மகனா? வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி என்ன?
LEO (No Spoilers): LCU என்பது என்ன? விஜய் எப்படி அதில் இடம் பிடிக்கிறார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com