Lokesh Kanagaraj : ரசிகன் முதல் இயக்குனர் வரை, ரோலர்கோஸ்டர் பயணம்

கைதி படம் முழுமையடைவதற்கு முன் விஜய் வாய்ப்பளித்தது போலவே மாஸ்டர் படம் நிறைவடைவதற்கு முன் கமலஹாசன் லோகேஷை அழைத்து தன் அடுத்தப் படத்தை இயக்க வாய்ப்பளித்தார்.
Lokesh with Kamal Hassan

Lokesh with Kamal Hassan

Twitter

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தற்போது கமலை வைத்து இயக்கி முடித்துள்ள விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் படத்தின் அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க உள்ள விஜய்யின் தளபதி 67 ஆகியவற்றை குறிப்பிட்டு லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>Vikram Kamal Hassan</p></div>

Vikram Kamal Hassan

Twitter

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் கனகராஜ் எம்பிஏ படித்தவர். ஃபேஷன் டெக்னாலஜியும் முடித்த லோகேஷ், வங்கிப் பணியாளராக பணியாற்றி வந்தார். சினிமா இயக்க வேண்டும் என்ற ஆசையால் காலம் என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கி, குறும்பட போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டிக்கு நடுவராக வந்திருந்த கார்த்திக் சுப்பராஜ், தொடர்ந்து படம் இயக்கும் படி இவரை ஊக்கப்படுத்தி உள்ளார்.

"ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ் -க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்."

லோகேஷ் தீவிரமான கமல் ரசிகர். அவர் கமலஹாசன் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல் போன்ற திறமைகளை கண்டு வியந்து திரைத்துறைக்கு வந்தவர். குறும்படங்கள் எடுத்ததன் மூலம் இவருக்கு முதல் படமான மாநகரம் இயக்க வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி மாநகரம் படத்தை பெரும் வெற்றியடையச் செய்தார்.

மாநகரம் படத்திற்கு பிறகு S.R.பிரபு அவர்கள் மீண்டும் லோகேஷிற்கு கைதி படத்தை இயக்க வாய்ப்பு தந்தார்.அதையும் மிகச் சரியாக பயன்படுத்தி மெகா ஹிட் கொடுத்தார்.கைதி படம் முழுமையடையும் முன்னே லோகேஷைப் பற்றி கேள்விப்பட்டு தளபதி விஜய் இவருக்கு தனது அடுத்த படமான மாஸ்டரை இயக்க வாய்ப்பளித்தார். மாஸ்டர் படம் பெற்ற வெற்றியை சொல்லத்தேவையில்லை, பிரம்மாண்டமான வசூல் சாதனையைப் படைத்தது.

கைதி படம் முழுமையடைவதற்கு முன் விஜய் வாய்ப்பளித்தது போலவே மாஸ்டர் படம் நிறைவடைவதற்கு முன் கமலஹாசன் லோகேஷை அழைத்து தன் அடுத்தப் படத்தை இயக்க வாய்ப்பளித்தார். தன் கனவு நாயகன் தன்னை அழைத்து அவரை இயக்க வாய்ப்பளித்தது லோகேஷிற்கு பெரும் மகிழ்ச்சியளித்தது."உன் கனவு நிஜமானது" என்று லோகேஷின் நண்பர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் அவரின் கனவு நாயகனான கமல்ஹாசன், "ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ் -க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்." என்று வாழ்த்தியிருப்பது லோகேஷுக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பெறும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

<div class="paragraphs"><p>Lokesh with Kamal Hassan</p></div>
Rocky - சினிமா விமர்சனம்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com