மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த கீதா கைலாசம் - யார் இவர்?

சின்னத்திரையில் பல நடிகர்களை அறிமுகப்படுத்திய பால கைலாசத்தின் மனைவியான கீதா கைலாசம் தற்போது சினிமாவில் குணச்சித்திர நடிகையாக மாறியுள்ளார். மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு இணையாக ஈடுகொடுத்து நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார் கீதா கைலாசம்.
மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த கீதா கைலாசம் - யார் இவர்?
மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த கீதா கைலாசம் - யார் இவர்?Twitter

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாமன்னன் படத்தில் வடிவேலு உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான இந்த படத்தில் வடிவேலு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை வென்றுள்ளார். இந்த படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து கவனம் ஈர்த்தவர் கீதா கைலாசம். யார் இவர்? இதற்கு முன்னர் என்னென்ன படங்களில் நடித்திருக்கிறார்.

கீதா கைலாசம் ஒரு நாடக கலைஞர், நடிகை, எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

சின்னத்திரையில் பல நடிகர்களை அறிமுகப்படுத்திய பால கைலாசத்தின் மனைவியான கீதா கைலாசம் தற்போது சினிமாவில் குணச்சித்திர நடிகையாக மாறியுள்ளார். இவர் இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தரின் மருமகள் ஆவார்.

நவரச எனும் வெப் தொடரில் சித்திரமாவாக நடித்த அவரது கதாபாத்திரம் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.

ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதியின் மனைவியாக ஒரு சில காட்சிகள் வந்து போனாலும் ரசிகர்களின் மனதை தொட்டு இருப்பார் கீதா கைலாசம்.

பா ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகரக்கிறது படத்தில் நடித்ததற்காக கீதா விகடனின் (2022) சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.

அதனைத் தொடர்ந்து வீட்ல விஷேசம் படத்தில் செவிலியராக நடித்த இவர் தற்போது மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்துள்ளார். மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு இணையாக ஈடுகொடுத்து நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார் கீதா கைலாசம்.

இந்த படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை கண்முன் நிறுத்தி அசுர நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார் கீதா. தற்போது இவரது கேரக்டருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த கீதா கைலாசம் - யார் இவர்?
சத்யபால் மாலிக்: பிரதமர் நரேந்திர மோடியுடன் மோதும் ஆளுநர் - யார் இவர்?

தயாரிப்பாளராக

2003 – அன்னி

1999 – கசலவு நேசம்

1996 – காதல் பகடை

நடிகையாக

2021 – நவரசம்

2021 - சார்பட்டா பரம்பரை

2022 - வீட்ல விசேஷம்

2023 - மாமன்னன்

மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த கீதா கைலாசம் - யார் இவர்?
நயன்தாரா முதல் தீபிகா வரை - புடவைக் கட்டிவிட ரூ.2 லட்சம் வாங்கும் Dolly Jain - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com