Sathya Malik

Sathya Malik

Facebook

சத்யபால் மாலிக்: பிரதமர் நரேந்திர மோடியுடன் மோதும் ஆளுநர் - யார் இவர்?

கடந்த 2.1.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நிகழ்வில் மேகாலயா ஆளுநர் மாலிக் ஒரு குண்டை தூக்கி போட்டது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2.1.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நிகழ்வில் மேகாலயா ஆளுநர் மாலிக் ஒரு குண்டை தூக்கி போட்டது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Farmers Protest

Farmers Protest

Facebook

மோடி மிகவும் திமிர் பிடித்தவர்

இப்போது ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் மீதான விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாள்வதை விமர்சித்த மாலிக், “விவசாயி பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது, ஐந்து நிமிடங்களாக அவருடன் சண்டையிட்டேன். அவர் மிகவும் திமிர் பிடித்தவராக இருந்தார். விவசாயிகள் 500 பேர் இறந்து விட்டார்கள் என்று நான் அவரிடம் சொன்னபோது, அவர் சொன்னார், ‘அவர்கள் எனக்காக இறந்தார்களா? உடனே நான் அவரிடம் சொன்னேன், ஏனென்றால் நீங்கள் ராஜா. இப்படியாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.”

Sathya Malik

எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ், மார்க் சக்கர்பர்க் : இவர்களுக்கு இவ்வளவு சொத்தா?

Rahul Gandhi

Rahul Gandhi

Facebook

மோடி ஒரு சர்வாதிகாரி

பின்னர் ஊடகங்களில் இந்த செய்தி அடிபட்ட பிறகு மாலிக் கூறினார்: "பிரதமர் திமிர் பிடித்தவர் என்று நான் கூறவில்லை, அவர் தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தார்."

பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இடதுசாரிகள் அவரை சர்வாதிகாரி என்று அழைக்கின்றனர். பாஜகவினரோ மோடியை மாபெரும் நாட்டுப்பற்றாளர் என்கின்றனர். இப்போது விவசாயிகள் குறித்து மோடி சொன்னதை வைத்துப் பார்த்தால் அவர் யார் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.

மோடியால் நியமிக்கப்பட்ட ஒரு ஆளுநரே இப்படி தைரியமாக மோடியை கடுமையாக விமரசிக்கிறாரே என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். சரி யார் இந்த சத்யபால் மாலிக்?

Rajya Sabha

Rajya Sabha

Facebook

ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தவர்

சத்ய பால் மாலிக் இந்திய சுதந்திரத்திறகு ஒருஆண்டு முன்பு ஜூலை 24, 1946 அன்று பிறந்தவர். அவருடைய ஹிஸ்வாடா கிராமம் உத்திரப் பிரதேத்தில் உள்ளது. மாலிக் உ.பியில் ஆதிக்கம் செலுத்தும் ஜாட் சாதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. தனது அரசியல் வாழ்வைத் துவங்குவதற்கு முன்பு அவர் மீரட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் சட்டப் படிப்பை முடித்தார். பின்னர் இந்திய பாராளுமன்றத்தால் நடத்தப்படும் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற ஆய்வுகள் நிறுவனத்தில் பாராளுமன்ற விவகாரங்களில் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளார்.

1974-77ல் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினராக அவர் தன் அரசியல் வாழ்வைத் துவங்கினார். அவர் 1980 முதல் 1986 மற்றும் 1986-89 வரை ராஜ்யசபாவில் உத்தரபிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். அப்போது போஃபர்ஸ் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தார். ஜனதா தளத்தின் உறுப்பினராக 1989 முதல் 1991 வரை அலிகாரில் இருந்து 9வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.

RSS

RSS

Facebook

மாலிக் ஆர்எஸ்எஸ் தொடர்பில்லாதவர்

தற்போது மாலிக் பாஜக-வில் உறுப்பினராக இருந்தாலும், ஆர்எஸ்எஸ் தொடர்பில்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது, 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு அவர் பாஜக-வில் சேர்ந்தார். மத்திய, மாநில அரசுகள், பார்லிமென்ட் விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்து, பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவரது அரசியல் வாழ்க்கையில், அவர் பல நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மாலிக் அக்டோபர் 2017 முதல் ஆகஸ்ட் 2018 வரை பீகார் ஆளுநராக இருந்தார். அவர் ஆகஸ்ட் 2018 முதல் அக்டோபர் 2019 வரை ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஆளுநராக இருந்தார். மேலும் அவரது பதவிக் காலத்தில் தான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான அரசியலமைப்பு முடிவு 5 ஆகஸ்ட் 2019 அன்று எடுக்கப்பட்டது.

1980-களின் பிற்பகுதியில் காஷ்மீரில் தீவிரவாதம் தொடங்கியதில் இருந்து மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் அரசியல்வாதி மாலிக் ஆவார். முன்னாள் பிரதமர்களான சரண் சிங் மற்றும் வி.பி. சிங் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியான மாலிக், காஷ்மீர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது, காஷ்மீர் மக்களின் நேசத்தை பெறுவதற்கான நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.

“இது ஒரு சவாலான வேலை. மாநில மக்களின் நம்பிக்கையைப் பெறுவதே அடிப்படை சவால்,” என்று பதவியேற்பதற்கு முன்பு கூறினார். மேலும் மாநிலத்தில் பிரச்சினைகளில் பிராந்திய ஏற்றத்தாழ்வு முதன்மையான பிரச்சினை என்று குறிப்பிட்டார். 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததையடுத்து, மாலிக் அங்கே ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

V.P.Singh

Charan Singh

V.P.Singh

Charan Singh

Newssense

சத்யபால் மாலிக்கின் தைரியத்திற்கு காரணம் என்ன?

தற்போது மேகாலயாவின் 21வது ஆளுநராகப் பணியாற்றுகிறார். அவர் கோவாவின் 18வது ஆளுநராகவும் இருந்திருக்கிறார்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் சத்யபால் மாலிக்கின் தைரியத்திற்கு காரணம் என்ன? முதலில் அவர் ஆர்.எஸ்.எஸ் தயாரிப்பு அல்ல. இரண்டாவது வி.பி.சிங், சரண்சிங் போன்றவர்களோடு நெருக்கமாக இருந்தவர் என்ற முறையில் ஏதோ கொஞ்சம் சமூகநீதிப் பார்வை அவரிடம் இருக்கிறது. மூன்றாவதாக காஷ்மீரில நெருக்கடியான காலத்தில் ஆளுநராக பணியாற்றியிருக்கிறார். அவருக்கு முன்பு அங்கே முன்னாள் இராணுவ ஜெனரல்கள்தான் ஆளுநர்களாக இருந்திருக்கின்றனர். அந்த வகையில் மக்களோடு நெருக்கமாக இருக்கும் ஒரு அரசியல்வாதியாக சத்யபால் மாலிக் இருந்திருக்கிறார்.

இப்போது மோடி இவரை எப்போது வெளியேற்றப் போகிறார் என்பதுதான் கேள்வி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com