Rocketry மாதவன் : என்ன பேசினார்? இணைய உலகம் அவரை கிண்டல் செய்வது ஏன்? | Video

பஞ்சாங்கத்தில் இருக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன் உருவாக்கப்பட்ட வானவரைபடத்தைப் வரைபடமாக பயன்படுத்தி இந்த செயற்கைக் கோள் பூமிக்கு வெளியே எந்தெந்த இடங்களைச் சுற்றி எங்கு செல்லும் என திட்டமிட்டு செவ்வாய் கிரத்தின் ஆர்பிட்டுக்கு அனுப்பினர்." எனப் பேசியிருந்தார் மாதவன்
மாதவன் - நம்பி நாராயணன்
மாதவன் - நம்பி நாராயணன்Twitter
Published on

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை நடிகர் மாதவன் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். இயக்குநராகவும் இதன் மூலம் அறிமுகமாகிறார்.

நம்பி நாராயணன், பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட விஞ்ஞானி. பின்னர் அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார். இது ஜேம்ஸ் பாண்ட் பானி கதையாக இருக்கிறதே என எண்ணி நம்பி நாராயணனைச் சந்தித்து பேசினார் மாதவன்.

இப்போது படத்தின் புரோமேஷனில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மாதவன் பல மேடைகளில் நம்பி நாராயணனின் சாதனைகள் மக்களிடம் சென்று சேரவில்லை என வருத்தப்பட்டார். ஒரு புரொமோஷன் நிகழ்வின் பேசும் போது 2014ம் ஆண்டு இந்தியா செலுத்திய மங்கள்யான் திட்டம் குறித்து பேசினார். மாதவன் அப்போது பஞ்சாங்கம் குறித்துப் பேசியது சர்ச்சையாகியிருக்கிறது.

" ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகள் மற்றும் ESA போன்றவை 800 மில்லியன் 900 மில்லியன் என செலவு செய்து 30வது முறை அல்லது 32வது முறைதான் வெற்றி பெற்றனர். பெரிய நாடுகளின் ராக்கெட்கள் செவ்வாய் வரை ராக்கெட் செல்வதற்கு 3 என்ஜின்கள் உள்ளன. ஒன்று அப்துல் கலாம் உருவாக்கிய solid fuel-based என்ஜின். இரண்டாவது லிக்விட் ஃபியுல், மூன்றாவது க்ராஜெனிக். இந்த க்ராஜெனிக் என்ஜின் தான் ராக்கெட் இலக்கை நோக்கி சரியான கோணத்தில் செல்ல உதவுகிறது.

மங்கள்யான்
மங்கள்யான்Twitter

இதுவரை வெற்றிகரமாக சென்ற நான்கு நாடுகளும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல பல கோடி செலவு செய்தனர். அவர்களின் ராக்கெட் விண்ணை நோக்கி செங்குத்தாக அதிக உயரம் பறக்கக் கூடியது. ஆனால் இந்தியாவிலிருந்து என்ஜின் குறைவான உயரமே பறக்கும். நம்பி நாராயணனின் என்ஜினும் குறைந்த உயரமே செல்லக்கூடியது.

மாதவன் - நம்பி நாராயணன்
விண்வெளியில் எப்படி கட்டடம் கட்டுவது? தூசியில் தீர்வு கண்ட விஞ்ஞானிகள் - ஓர் அடடே பதிவு

ஆனால் 2014ம் ஆண்டு சரியாக எந்த மைக்ரோ விநாடியில் ஶ்ரீகரிகோட்டாவிலிருந்து ராக்கெட்டை செலுத்தினால் சரியாக இருக்கும் என, பஞ்சாங்கத்தில் இருக்கும் சூரியனின் இருப்பிடம், கிரகங்களின் இருப்பிடம், கிரகங்களின் ஈர்ப்புவிசை தாக்கம் ஆகியவற்றை கொண்ட, பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன் உருவாக்கப்பட்ட வான வரைபடத்தைப் வரைபடமாக பயன்படுத்தி இந்த செயற்கைக் கோள் பூமிக்கு வெளியே எந்தெந்த இடங்களைச் சுற்றி எங்கு செல்லும் என திட்டமிட்டு செவ்வாய் கிரகத்தின் ஆர்பிட்டுக்கு அனுப்பினர்." எனப் பேசியிருந்தார் மாதவன். ராக்கெட் அறிவியலில் பஞ்சாங்கம் பற்றிப் பேசியது பலரையும் கவனிக்க வைத்தது.

இணையத்தில் இரு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாதவன் - நம்பி நாராயணன்
2022 -ல் இதுவரை வெளியான படங்களில் வெற்றியடைந்த படங்கள் இவைதான்!
மாதவன் - நம்பி நாராயணன்
"ஆம்பர் ஹெர்ட் தான் உலகின் அழகான பெண்" - கிரேக்க முறை என்ன சொல்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com