பிரதாப் போத்தன் காலமானார் : எழுத்தாளர் முதல் தயாரிப்பாளர் வரை - திரைப் பயணம்

கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த பிரதாப் போத்தன் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Pratap Pothen
Pratap Pothen Twitter
Published on

பிரதாப் போத்தன் காலமானார்

கேரளாவின் திருவனந்தபுரத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தவர் நடிகர் பிரதாப் போத்தன். இவர் கடந்த 1978-ம் ஆண்டு வெளியான ஆரவம் என்கிற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.

மலையாள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த பிரதாப் போத்தன், தமிழில் இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கிய "அழியாத கோலங்கள்" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமானார்.

Pratap Pothen
Pratap Pothen Twitter

திரைப்படங்கள்

தமிழில் அவர் அழியாத கோலங்கள், மூடுபனி, இளமைக் கோலம், வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், சிந்து பைரவி, மனைவி ரெடி, ஜல்லிக்கட்டு, பேசும் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த பிரதாப் போத்தன் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

Pratap Pothen
Pratap Pothen Twitter

இயக்குநராக அவதாரம்

ஏராளமான படங்களில் நடித்து வந்த பிரதாப் போத்தன் கடந்த 1985-ம் ஆண்டு இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இவர் இயக்கிய முதல் தமிழ் திரைப்படம் ”மீண்டும் ஒரு காதல் கதை”. இப்படத்தில் பிரதாப் போத்தனும், ஜோடியாக ராதிகா நடித்திருந்தார்.

மீண்டும் ஒரு காதல் கதை படத்தை இயக்கி நடித்ததுடன் ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி மற்றும் லக்கி மேன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களைத் தமிழில் இயக்கி சிறந்த இயக்குநராகவும் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

Pratap Pothen
நடிகர் பூ ராமு காலமானார்: பூ முதல் கர்ணன் வரை - அவரது இந்த படங்களை பார்த்திருக்கிறீர்களா?
Pratap Pothen
Pratap Pothen Twitter

விருதுகள்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் எனப் பன்முகங்களைக் கொண்டு இந்திய சினிமாவின் தன்னிகரற்ற திரை பிரபலமாக வலம் வந்த பிரதாப் போத்தன் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

சிறந்த அறிமுக இயக்குநர் விருதை ”மீண்டும் ஒரு காதல் கதை” படத்திற்காக 1985 ஆண்டு பிரதாப் போத்தன் பெற்றார். மேலும் இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது, கேரள மாநில திரைப்பட விருது எனப் பல விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார்.

Pratap Pothen
MS Dhoni : தசாப்த கால பயணம், தளராத நம்பிக்கை - 'தல தோனி' இந்தியாவுக்கு செய்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com