Cooku with Comaliயிலிருந்து விலகிய மணிமேகலை - வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்

பெரும்பாலும் ஆண்களின் தோற்றத்தில் வரும் மணிமேகலை குறைந்த காலத்திலேயே அதிக ரசிகர்களை ஈர்த்தார். இவரது நடவடிக்கைகள், வரும் கெஸ்ட்களிடம் வம்பிழுத்து செய்யும் நகைச்சுவை, இவருக்கும் செஃப் வெங்கடேஷ் பட்டிற்கும் இருக்கும் ராப்போ நல்ல வரவேற்பை பெற்றது.
Cooku with Comaliயிலிருந்து விலகிய மணிமேகலை - வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
Cooku with Comaliயிலிருந்து விலகிய மணிமேகலை - வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்ட்விட்டர்
Published on

Cooku with Comali நிகழ்ச்சியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார் தொகுப்பாளினி மணிமேகலை.

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி Cooku with Comali. 2019ல் தொடங்கி, மூன்று சீசன்களை கடந்து தற்போது 4வது சீசன் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

சமைப்பவர்களுடன், சமையலை பற்றி தெரியாதவர்கள் இணைந்து, நகைச்சுவை செய்துவரும் ஒரு காமெடி சமையல் ரியாலிட்டி ஷோ. திரைப்பட, சின்னத்திரை நட்சத்திரங்கள் இதில் போட்டியாளர்களாக கலந்துகொள்வார்கள்.

சமையல் கலை நிபுணர்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இதில் நடுவர்களாக உள்ளனர்

ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதிப்போட்டியில், அந்த சீசனின் பெஸ்ட் குக்கிற்கு டைட்டில் வழங்கப்படும்.

இவர்களுக்கு போட்டியில் உதவ கோமாளிகள் இருப்பார்கள். சிவாங்கி, புகழ், பாலா உள்ளிட்டோருடன் சேர்த்து, கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக அதே தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் தொகுப்பாளினி மணிமேகலை பங்கேற்றார். இந்த நான்காவது சீசனிலும் அவர் பங்கேற்றார்.

பெரும்பாலும் ஆண்களின் தோற்றத்தில் வரும் மணிமேகலை குறைந்த காலத்திலேயே அதிக ரசிகர்களை ஈர்த்தார். இவரது நடவடிக்கைகள், வரும் கெஸ்ட்களிடம் வம்பிழுத்து செய்யும் நகைச்சுவை, இவருக்கும் செஃப் வெங்கடேஷ் பட்டிற்கும் இருக்கும் ராப்போ நல்ல வரவேற்பை பெற்றது.

Cooku with Comaliயிலிருந்து விலகிய மணிமேகலை - வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
Bigg Boss : ஜி பி முத்துக்கு பதிலாக பிக் பாஸ் வீட்டுக்குள் மன்சூர் அலிகான் வருகிறாரா..?

முக்கியமாக இவர் தரித்த சோட்டா பீம், வெங்கடேஷ் பட், ரெடின் கிங்ஸ்லி பாத்திரங்கள் பிரபலம். இந்நிலையில், நிகழ்ச்சியை விட்டு தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார் மணிமேகலை.

இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில், நானே வருவே தனுஷ் கெட்டப்பில் இருக்கும் மணிமேகலை, புகைப்படத்தை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த செய்தியை அறிவித்திருந்தார்.

"இன்று CWCயில் எனது கடைசி எபிசோட்.

நான் வரமாட்டேன் இன் நானே வருவேன் கெட்டப்.

2019ல், முதல் சீசன் தொடக்கத்திலிருந்து நீங்கள் அனைவரும் எனக்கு அளவு கடந்த அன்பை பொழிந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்."

Cooku with Comaliயிலிருந்து விலகிய மணிமேகலை - வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
"சிவகார்த்திகேயன் எல்லோருக்குமான நம்பிக்கை" - ஒரு இயக்குநரின் நெகிழ்ச்சியான பகிர்வு

என் முன் வைக்கப்படும் ஒவ்வொரு சவாலுக்கும், ஒவ்வொரு தருணத்திலும் என்னுடைய பெஸ்ட்டை நான் கொடுக்க எக்ஸ்ட்ராவாக உழைப்பேன். இம்முறையும் உங்களை என்டெர்டெயின் செய்வதில் நியாயமாக நடந்துகொண்டேன் என்ற நம்பிக்கையுடன் விடைபெருகிறேன்.

இனி வரும் காலத்தில் நான் என்ன செய்தாலும், இதே அன்பு கிடைக்கும் என நம்புகிறேன்" என்று நெகிழ்ச்சியாக பகிர்ந்திருந்தார்.

உடன் பணியாற்றியவர்கள் அவருக்கு வாழ்த்துகளை கூறிவரும் நிலையில், அவரது விலகலுக்கான காரணம் தெரியவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மணிமேகலையின் இந்த போஸ்ட் வைரலாகி வருகிறது

Cooku with Comaliயிலிருந்து விலகிய மணிமேகலை - வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
Anushka Shetty: "எனக்கு அரிய வகை நோய் இருக்கிறது” மனம் திறந்த நடிகை - என்ன பிரச்னை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com