Bigg Boss : ஜி பி முத்துக்கு பதிலாக பிக் பாஸ் வீட்டுக்குள் மன்சூர் அலிகான் வருகிறாரா..?

இதற்கிடையில் ஜி பி முத்து யாரும் எதிர்பாராத விதமாக தன் மகனை பார்க்க வேண்டும் என்று வருத்தம் தெரிவித்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் மன்சூர் அலிகான் வருகிறாரா
பிக் பாஸ் வீட்டுக்குள் மன்சூர் அலிகான் வருகிறாராTwitter
Published on

விஜய் டிவி தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ஏற்கனவே 5 சீசன் முடிவடைந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனில் டிக் டாக் பிரபலம் முதல் இலங்கை செய்தி வாசிப்பாளர் வரை பலர் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியாளர்களில் ஒருவர் தான் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து.

Bigg Boss ஜி.பி.முத்து : மீண்டும் போட்டிக்கு திரும்புவாரா?
Bigg Boss ஜி.பி.முத்து : மீண்டும் போட்டிக்கு திரும்புவாரா?Twitter

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே செல்வதற்கு முன்பே ஜி பி முத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.நிகழ்ச்சிக்குள்ளே சென்றதும் ஜிபி முத்து ஆர்மி தொடங்கினர்.

இதற்கிடையில் ஜி பி முத்து யாரும் எதிர்பாராத விதமாக தன் மகனை பார்க்க வேண்டும் என்று வருத்தம் தெரிவித்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பதிலாக பிரபல நடிகர் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டுக்கு வரவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ரசிகர்களும் சற்று உற்சாகம் அடைந்துள்ளனர். சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் மன்சூர் அலிகான் நடித்த அசுரன் படத்தில் (1995) வரும் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் இடம்பெற்றது. படம் வெளியான பிறகு இதற்கு மன்சூர் அலிகான் நடனமாடியது ரசிகர் மத்தியில் வைரல் ஆனது.

அவரின் எதார்த்த பேச்சுக்கும் குறும்புத்தனத்திற்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பிக் பாஸ் வீட்டுக்குள் மன்சூர் அலிகான் வருகிறாரா
டிக்டாக் டு பிக்பாஸ்: மக்கள் மனம் வென்ற இந்த ஜி.பி முத்து யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com