மார்க் ஆண்டனி முதல் கிக் வரை - இந்த மாதம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்

செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள படங்களை தொகுத்துள்ளோம்
மார்க் ஆண்டனி முதல் கிக் வரை - இந்த மாதம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்
மார்க் ஆண்டனி முதல் கிக் வரை - இந்த மாதம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்twitter

சினிமா பார்க்க யாருக்கு தான் பிடிக்காது? நமக்கு பிடித்த நடிகர் நடிகைகளின் படத்தை மட்டுமே பார்த்துவந்த காலம் போய், தற்போது எந்த படத்தையும் பார்க்கும் ஆர்வம் பலருக்கும் வந்துவிட்டது.

அதுவும் கொரோனா காலகட்டம் மொழி என்ற எல்லையை நாம் கடக்க பேர் உதவியாக இருந்தது. ஓடிடி தளங்கள், தியேட்டர் என இரண்டுக்குமே அதற்கான ரசிகர் கூட்டம் இருக்கிறது.

வாரா வாரம் ஓடிடி -யிலோ, தியேட்டரிலோ எந்த படம் ரிலீஸ் ஆக போகிறது என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள படங்களை தொகுத்துள்ளோம்

கிக்

சந்தானம், தான்யா ஹோப் நடித்துள்ள இந்த படத்தை பிரஷாந்த் ராஜ் இயக்கியுள்ளார். பிரம்மானந்தம், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மார்க் ஆண்டனி முதல் கிக் வரை - இந்த மாதம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்
OTT Release : மாமன்னன் முதல் ரெஜினா வரை - இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள்!

கருமேகங்கள் கலைகின்றன

இயக்குநர் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்

லக்கி மேன்

இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஆக அறிமுகமாகிறார் நடிகர் மற்றும் ஆர் ஜே பாலாஜி.

பரம்பொருள்

சரத்குமார் அமிதாஷ் பிரதான் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவும் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

ரங்கோலி

அறிமுக நடிகர்கள் ஆன பிரார்தனா மற்றும் ஹமரேஷ் நடிக்கும் இந்த படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படமும் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

மார்க் ஆண்டனி முதல் கிக் வரை - இந்த மாதம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்
விருமன் முதல் Cadaver வரை : தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்

மார்க் ஆண்டனி

செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் மார்க் ஆண்டனி படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்

மார்க் ஆண்டனி முதல் கிக் வரை - இந்த மாதம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்
பத்து தல முதல் Citadel வரை: இந்த வார ஓடிடி விருந்து!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com