வரலாறு முதல் பிரின்ஸ் வரை; தீபாவளியை திருவிழாவாக்கிய தமிழ் திரைப்படங்கள்!

இந்த வருடம் தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் பிரின்ஸ் திரைப்படம் மற்றும் கார்த்தி நடிப்பில் சர்தார் வெளியாகவுள்ளது
Deepavali releases
Deepavali releasesCanva
Published on

தீபாவளி என்றால் பட்டாசு, பலகாரங்களுடன் நினைவுக்கு வரும் மற்றொரு விஷயம் திரைப்படங்கள். பல ஆண்டுகளாக பண்டிகை சமயங்களில் புதிய படத்தை வெளியிடும் வழக்கம் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. ரஜினி, கமல்,விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்கள் தீபாவளி பொங்கல் சமயங்களில் வெளிவந்தால் ஹிட் ஆகும் என்ற வியாபார நோக்கமும் இதற்கு ஒரு காரணம்.

அந்த வகையில், இதுவரை தமிழில் தீபாவளி அன்று வெளியான படங்கள் என்னவென்று இங்கு பார்க்கலாம்...

வரலாறு 2006:

2006ஆம் ஆண்டு, அஜித், அசின், ரமேஷ் கண்ணா, கன்னிகா ஆகியோர் நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வரலாறு. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். முதன் முதலில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருந்த திரைப்படமும் இது தான். 175 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் கலெக்ஷனை குவித்தது. காட்ஃபாதர் என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட இந்த படம், பின்னர் தமிழக அரசின் Tax Exemption கட்டுப்படு படி, வரலாறு என்று பெயர் மாற்றப்பட்டது.

வல்லவன் - 2006:

அதே வருடம் தீபாவளிக்கு வெளியான மற்றொருபடம் வல்லவன். சிம்பு, நயன்தாரா, சந்தியா, சந்தானம், ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தை எழுதி, இயக்கி, நடித்திருந்தார் சிம்பு. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மன்மதன் படத்திற்கு பிறகு சிம்பு எழுதி இயக்கிய இந்த படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

பொல்லாதவன் - 2007:

தனுஷ், திவ்யா, கிஷோர், டேனியல் பாலாஜி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் பொல்லாதவன். இதுவே தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணிக்கு ஆரம்பமாகவும் இருந்தது. ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னத்தில் இந்த திரைப்படம் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேல் - 2007:

சூர்யா, அசின், வடிவேலு, சரண்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேல். சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

ஆதவன் 2009:

சூர்யா, நயன்தாரா, வடிவேலு, சரோஜா தேவி, முரளி ஆகியோர் நடித்த இந்த படம் 2009 தீபாவளிக்கு வெளியானது. கே எஸ் ரவிகுமார் இயக்கிய இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். பாக்ஸ் ஆஃபீஸில் 25 கோடி வசூல் செய்திருந்தது திரைப்படம்.

பேராண்மை 2009:

ஜெயம் ரவி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படத்தைஎஸ். பி. ஜனநாதன் இயக்கியிருந்தார். போரிஸ் வாசில்யேவ் என்பவர் எழுதிய The Dawns Here Are Quiet என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது இந்த படம். இதில் ஜெயம் ரவி வன அதிகாரியாக நடித்திருப்பார்

மைனா 2010:

விதார்த், அமலா பால், தம்பி ராமையா ஆகியோர் நடித்த இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கினார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். 30 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்த இந்த படம், தேசிய விருதுக்கு பரிந்துரையானது. நடிகர் தம்பி ராமையா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

ஏழாம் அறிவு 2011:

சூர்யா, ஸ்ருதி ஹாசன், Johnny Tri Nguyen நடித்த இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படம், 80 கோடி வசூல் செய்திருந்தது.

வேலாயுதம் 2011:

மக்களை பிரச்னைகளிலிருந்து காப்பாற்றும், சமூக நலனுக்காக போராடும் ஒரு சூப்பர் ஹீரோவாக விஜய் நடித்த படம் வேலாயுதம். மோகன் ராஜா இயக்கிய இந்த படத்தில் ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன், சந்தானம் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

துப்பாக்கி 2012

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிச் ஜெயராஜ் இசையில் வெளியான இந்த திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்திருப்பார் விஜய். காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யுத் ஜம்வால் நடித்திருந்த இந்த படம் கிட்டதட்ட 125 கோடி ரூபாய் வசூல் செய்தது.

போடா போடி 2012:

சிம்பு, வரலக்ஷ்மி சரத் குமார் நடித்த இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கினார். இது விக்னேஷ் சிவன், வரலக்ஷ்மி இருவருக்குமே முதல் படம்.

ஆரம்பம் 2013:

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன் இசையில் உருவான இந்த படத்தில், அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்திருந்தனர். 60 கோடி செலவில் தயாரான இந்த படம், பாக்ஸ் ஆஃபீஸில் 124 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது

கத்தி 2014:

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது படம் கத்தி. இரட்டை வேடத்தில் விஜய், சமந்தா, சந்தானம், நீல் நிதின் முகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்

தூங்காவனம் 2015:

ஸ்லீப்லெஸ் நைட்ஸ் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கமல் ஹாசன், திரிஷா, கிஷோர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ராஜேஷ் செல்வா இயக்கிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்

வேதாளம் 2015:

அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் வேதாளம். அனிருத் இசையில், அஜித், லக்ஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி, கோவை சரளா இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ் அல்லாமல், இந்தி மற்றும் பீகாரி மொழிகளில் இந்த படம் வெளியானது

Deepavali releases
விக்ரம் முதல் கேஜிஎஃப் வரை - 2022ல் ரூ.100 கோடி வசூல் செய்த தென்னிந்திய படங்கள்

கொடி 2016:

தனுஷ் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் கொடி. திரிஷா, அனுபமா பரமேஸ்வரன், சரண்யா, காளி வெங்கட், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடுத்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

காஷ்மோரா 2016:

கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் காஷ்மோரா. நயன்தாரா, ஸ்ரீ திவ்யா, விவேக் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்

மெர்சல் 2017:

ஆட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது படம் மெர்சல், விஜய், வடிவேலு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடித்த இந்த படத்திற்கு ஏ அர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் விஜய் மூன்று வேடங்களில் நடித்த முதல் திரைப்படம். பாக்ஸ் ஆஃபீஸில் 260 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது மெர்சல்.

மேயாத மான் 2017:

வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா நடித்த படம் மேயாத மான். ரத்தின குமார் இயக்கிய இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார் இணைந்து இசையமைத்திருந்தனர். ரத்தின குமார் இயக்கிய குறும்படமான மது என்ற படத்தின் நீட்சியாகவே இந்த படம் எடுக்கப்பட்டது, இயக்குநருக்கும், பிரியா பவானி சங்கருக்கும் இது முதல் படம்.

சர்கார் 2018:

மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் விஜய் கூட்டணியில் வந்த திரைப்படம் சர்கார். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சாயலில் எழுதப்பட்டிருந்தது நடிகர் விஜய்யின் கதாபாத்திரம். கீர்த்தி சுரேஷ் யோகி பாபு ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்

பிகில் 2019:

விஜய் அட்லீ கூட்டணியில் வெளிவந்த மூன்றாவது திரைப்படம் பிகில். நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர் ஆகியோர் நடித்த இந்த படம் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்தது.

கைதி:

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படம் கைதி. கார்த்தி, நரேன், தீனா, அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் நடித்த இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். இந்த படம் LCU எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் வெளிவந்த முதல் படம்.

சூரரைப் போற்று 2020:

தீபாவளிக்கு இரண்டு தினங்கள் முன்பு வெளியான சூரரைப் போற்று நேரடியாக ஓடிடியில் வெளியானது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அமேசான் பிரைமில் வெளியானது சூரரைப் போற்று. சூர்யா, அபர்னா பாலமுரளி, ஊர்வசி நடித்த இந்த படத்திற்கு, ஐந்து பிரிவுகளில் தேசிய விருது வழங்கப்பட்டது.

மூக்குத்தி அம்மன் 2020:

தீபாவளி அன்று நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளிவந்தது மூக்குத்தி அம்மன் படம். ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி, நயன்தாரா ஆகியோர் இதில் நடித்திருந்தனர். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நடித்திருந்தார் நயன்தாரா.

அண்ணாத்த 2021:

ரஜினிகாந்த் சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக நடித்திருந்தார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். 180 கோடி செலவில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆஃபீஸில் 240 கோடி வசூல் செய்திருந்தது.

இந்த வருடம் தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் பிரின்ஸ் திரைப்படம் மற்றும் கார்த்தி நடிப்பில் சர்தார் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Deepavali releases
வாரிசு vs துணிவு பொங்கலுக்கு உறுதி: இதுவரை மோதிக்கொண்ட விஜய், அஜித் படங்கள்- வென்றது யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com