பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒன்றாக வெளியாவது திரையரங்குகளில் ரசிகர்களிடையே தள்ளு முள்ளு எழ வைக்கும். தங்கள் ஹீரோக்களின் படங்கள் ஒன்றாக மோதிக்கொள்வது ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தும். அதுவும் அஜித், விஜய் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.
கடந்த 2014ம் ஆண்டு ஜில்லா, வீரம் படங்கள் ஒன்றாக வெளியாகின. 9 ஆண்டுகள் கழித்து 2023ல் வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒன்றாக வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
Big Breaking: "வாரிசு vs துணிவு - பொங்கல் ரிலீஸ் உறுதியா?"- திருப்பூர் சுப்பிரமணியம் பதில்
வரும் ஜனவரி 12ம் தேதி வியாழக்கிழமை அஜித்தின் துணிவு படமும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு துணிவுக்கு முன்னதாக வாரிசு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதுவரை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விஜய், அஜித் படங்கள் எவை? அவற்றில் எவை அதிகம் வென்றிருக்கின்றன எனப் பார்க்கலாம்.
1996ம் ஆண்டு பொங்கல் முதன்முதலாக விஜய், அஜித் படங்கள் ஒன்றாக வெளியாகின. ஜனவரி 12ல் வான்மதியும் அதைத் தொடர்ந்து 15ம் தேதி கோயம்புத்தூர் மாப்பிள்ளையும் வெளியானது.
அப்போது இருவரும் பெரிய ஸ்டாராக இல்லாவிட்டாலும் இருவரின் படமும் வெற்றி பெற்றது.
1996ம் ஆண்டே ஒரே வாரத்தில் பூவே உனக்காக மற்றும் கல்லூரி வாசல் படங்கள் வெளியானது. இதில் பூவே உனக்காக வெற்றி பெற்றது. அஜித் - பிரசாந்த் நடிப்பில் வெளியான கல்லூரி வாசல் தோல்வியடைந்தது.
1999ம் ஆன்டு ஜனவரி 29ல் துள்ளாத மனமும் துள்ளும் படமும் அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி அஜித்தின் உன்னைத் தேடி படமும் வெளியானது.
இவற்றில் துள்ளாத மனமும் துள்ளும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. உன்னைத் தேடி விமர்சன ரீதியாக பாராட்டையும் அளவான லாபத்தையும் பெற்றிருந்தது. தழுவியது.
19 மே 2000ல் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜயின் குஷி படமும் மறுபுறம் அஜித்தின் உன்னை கொடு என்னைத் தருவேன் படமும் ஒன்றாக வெளியானது.
இரண்டுமே காதல் படங்கள், ஆக்ஷன் கலந்து வெளியான அஜித்தின் படம் குஷி முன் தோல்வியைத் தழுவியது. இளைஞர்களின் ஏக போக ஆதரவுடன் குஷி பெருவெற்றியை பெற்றது. அந்த படம் விஜயின் வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்தது.
இரண்டு ஆண்டுகள் கழித்து விஜய் சூர்யா நடித்த பிரண்ட்ஸ் படம் வெளியானது. இதற்கு போட்டியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா வெளியானது.
தீனா அஜித் வாழ்க்கையில் திருப்புமுனையாக வெளியான படம் என்றாலும் இதனுடன் போட்டிப் போட்டு அதிக நாட்கள் ஓடியது விஜயின் பிரண்ட்ஸ். இதில் வரும் கான்ட்ராக்டர் நேசமணியை நாம் யாருமே மறக்க முடியாது.
அடுத்த ஆண்டே நவம்பரில் பகவதி மற்றும் வில்லன் திரைப்படங்கள் வெளியாகின.
இதில் பகவதி திரைப்படம் காமடிக் காட்சியைத் தவிர்த்து ரசிகர்களுக்கு சோதனையாகவே அமைந்தது. வில்லன் திரைப்படம் வெற்றிப்படமாக உருவானது.
தொடர்ந்து அடுத்த தீபாவளியில் திருமலை மற்றும் ஆஞ்சநேயா படங்கள் வெளியானது.
விஜயின் முதல் ஆக்ஷன் படமாக திருமலையை கணக்கில் கொள்ளலாம். தளபதியின் மிரட்டல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. எதிரில் வெளியான ஆஞ்சநேயா ரசிகர்களைத் தாண்டி மக்களை ஈர்க்க தவறியது.
2006 பொங்கலுக்கு ஆதி மற்றும் பரமசிவன் படங்கள் வெளியாகின. இரண்டுமே ஆக்ஷன் படங்கள். விடுமுறையும் சேர்ந்து வந்ததால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருந்திருக்கலாம். என்னதான் இருவருமே பெரிய ஹீரோக்களாக இருந்தாலும் படம் நல்லா இருந்தால் மட்டுமே வெற்றிபெரும் என மக்கள் உணர்த்தினர். இரண்டு படங்களுமே தோல்வியைத் தழுவியது.
பிரபு தேவா இயக்கத்தில் விஜயின் கெரியரில் முக்கியமான திருப்பமாக அமைந்தது போக்கிரி திரைப்படம். மிகப் பெரிய வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. விஜய்க்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்ததில் போக்கிரி படத்தின் பங்கு கணிசமானது.
போக்கிரிக்கு எதிராக வெளியான ஆழ்வார் அடையாளமே தெரியாமல் போனது.
7 வருட இடைவேளைக்குப் பிறகு 2014 பொங்கலுக்கு ஜில்லா மற்றும் வீரம் படங்கள் ஒன்றாக வெளியானது. இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. ஆனால் வீரம் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் மிதந்தது என்றே கூறலாம். சிவா - அஜித் கூட்டணி முத்திரையைப் பதித்தது இந்த படம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust