சர்வதேச அளவில் சர்ச்சைகளை சந்தித்த 8 திரைப்படங்கள் - சுருக்கமான வரலாறு

இப்படியும் படங்கள் வந்ததா என சிந்திக்கவைக்கும்படியான சில படங்கள் வரலாற்றில், கிளாசிக் திரைப்படங்களாக இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் படத்தை பார்த்தவர்கள் பலரும், இந்த படங்களின் தவறான கருத்து திணிப்பிற்காக அவற்றை தூற்றியுள்ளனர்.
காமெடி, கேனிபலிசம், வன்முறை: சர்ச்சைகளை சந்தித்த க்ளாசிக் திரைப்படங்கள்
காமெடி, கேனிபலிசம், வன்முறை: சர்ச்சைகளை சந்தித்த க்ளாசிக் திரைப்படங்கள்canva
Published on

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப, திரைப்படங்களும், கதைகளும் மாறி வருகின்றன. பெண்களை முன்னிறுத்தும் படங்கள், முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பது, கற்பனைக் கதையாக மட்டுமல்லாமல் நிஜத்தையும், திரை வழி காண்பிப்பது என நிறைய மாறிவிட்டது சினிமா.

தற்காலத்தில் வன்முறையை கூட சரியான அளவில் படமாக்கினால், எந்த தடையுமின்றி அவை திரையிடப்படுகிறது. பார்ப்பதற்கும் ரசிகர்கள் குவிகின்றனர்.

ஆனால், இப்படியும் படங்கள் வந்ததா என சிந்திக்கவைக்கும்படியான சில படங்கள் வரலாற்றில், கிளாசிக் படங்களாக நிலைத்திருக்கின்றன. படத்தை பார்த்தவர்கள் பலரும், இந்த படங்களின் தவறான கருத்து திணிப்பிற்காக அவற்றை தூற்றியுள்ளனர்.

அதில் சில படங்களை இங்கு காணலாம்,

1.White Chicks (2004)

இரண்டு கருப்பின FBI உளவாளிகள், போதை பொருள் கடத்தும் கும்பலை தவறவிடுகிறார்கள். அவர்களை கண்டுபிடித்து சிறைப்படுத்த வெள்ளை இன பெண்களை போல வேஷமிட்டுக்கொள்கிறார்கள்.

இந்த படம், இன பாகுபாடு, பாலின பாகுபாடு, கருப்பினத்தவர்கள், பெண்களுக்கு எதிரான சர்ச்சைக்குறிய கருத்துகளை காமெடி வடிவில் முன்வைத்தற்காக விமர்சிக்கப்பட்டது.

2.La piscine (1969)

இத்தாலிய பிரஞ்சு மொழித் திரைப்படமான இது, அளவுக்கு அதிகமான ஆபாசம் மற்றும் முகம் சுளிக்கவைக்ககூடிய, அர்த்தமற்ற பாணியில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

மேலும், படமாக்கப்பட்டவிதமும், பார்ப்பவர்களை குழப்பி, கதையை சரியாக முன்வைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது

காமெடி, கேனிபலிசம், வன்முறை: சர்ச்சைகளை சந்தித்த க்ளாசிக் திரைப்படங்கள்
Guide Dogs : மனிதர்களுக்கு கண்களாக இருக்கும் நாய்கள் - வழிகாட்டும் விலங்குகள் உருவான கதை!

3.Revenge of the Nerds (1984)

வகுப்பறையில், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், சற்றே குறைவாக படிக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஒரு மோதல் எப்போதும் இருக்கும். நாம் பார்த்த படங்களில் எல்லாம், லாஸ்ட் பென்ச் மாணவர்களை ஹீரோ போல காட்டியிருப்பார்கள்.

அவற்றிற்கு மத்தியில், Revenge of the Nerds திரைப்படம், படிப்பாளிகளை ஹீரோவாக காண்பிக்கும் படமாக எடுக்கப்பட்டது.

ஆனால், சூழ்ச்சி, ஆள்மாறாட்டம், பாலியில் வன்கொடுமை போன்ற விஷயங்கள் சரி என்பது போல படமாக்கப்பட்டதால், பலரும் இந்த திரைப்படத்தை எதிர்க்கின்றனர். இந்த கதையை எழுதிய கதாசிரியர், பல வருடங்கள் கழித்து தான் கதை எழுதிய விதத்திற்காக மனம் வருந்தியிருந்தார்.

Keerthanaa Ravikumar

4. Ace Ventura: Pet Detective (1994)

ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரியை ஒரு சிறந்த காமெடி நடிகராக உயர்த்திய படம் Ace Ventura: Pet Detective. ஆனால், மூன்றாம் பாலினத்தவர் மீதான வெறுப்பு, பயம், மற்றும் அவர்களை மரியாதைக்குறைவாக நடத்துவது ஆகிய விஷயங்களை இந்த திரைப்படம் சரி என்ற பாணியில் சொல்லியிருந்தது, தற்காலத்து ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது

5.Cannibal Holocaust (1980)

தன் இனத்தை சேர்ந்த உயிரினத்தையே உண்ணும் ஜீவராசிகளை கேனிபல் என்கிறோம். அமேசான் காடுகளில் நிலவும் கேனிபலிசத்தை இந்த திரைப்படத்தில் படமாக்கியிருப்பார்கள்.

இவை வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதால், ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காமெடி, கேனிபலிசம், வன்முறை: சர்ச்சைகளை சந்தித்த க்ளாசிக் திரைப்படங்கள்
Mary Bell: பாலியல் தொழிலாளியின் மகள் சீரியல் கில்லரான கதை - ஒரு விறுவிறு வரலாறு

6.The Big Feast (1973)

பிரஞ்சு காமெடி திரைப்படமான இது சர்ச்சைக்குறியதாகவும், தங்கள் நாட்டு கலாச்சாரத்திற்கு ஒத்துப்போகாமலும் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் நுகர்வோரின் நிலையை தாழ்த்தி காட்டியுள்ளதாகவும் இதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இந்த திரைப்படத்திற்கு பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது

7.The Mother and the Whore (1973)

1973 ஆம் ஆண்டு நடந்த கான்ஸ் திரைப்பட விழாவில் பல விருதுகளை குவித்திருந்த இந்த திரைப்படம், அதன் தன்மையற்ற மொழி, அதிகபடியான ஆபாசம் ஆகியவற்றிற்காக விமர்சகர்களின் எதிர்ப்பை சந்தித்தது.

மேலும் பிரன்சு நாட்டை அவமதிக்கும் விதத்தில் இந்த படம் அமைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

நிஜ வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் வெளியான பிறகு, கதையில் சம்பந்தப்பட்டிருந்த பெண் தற்கொலை செய்து கொண்டதும் சர்ச்சையை கிளப்பியது.

8.Life of Brian (1979)

கத்தோலிக் கிறிஸ்துவ மக்கள், இந்த திரைப்படம், தங்களது மதத்தை அவமதிக்கும் விதமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தனர்.

கதாநாயகன் ப்ரையன் இயேசு கிறிஸ்து பிறந்த அதே நாளில் பிறந்ததால், கடவுளுக்கு நிகராக போற்றப்படுகிறான்.

ஆனால் அவனோ, கடவுளின் பெயரில் மக்கள் பின்பற்றும் வழக்கங்களை எதிர்ப்பவனாக வளர்கிறான். இதனால், குறிப்பிட்ட சமூகத்தவரை இந்த படம் அவமதிக்கிறது எனக் கூறி, பல எதிர்ப்புகள் கிளம்பின

எனினும், படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருந்தது.

காமெடி, கேனிபலிசம், வன்முறை: சர்ச்சைகளை சந்தித்த க்ளாசிக் திரைப்படங்கள்
Oxford முதல் Cambridge வரை: உலகின் பழமையான பல்கலைக்கழகங்கள் - இப்போதைய தரம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com