Mary Bell: பாலியல் தொழிலாளியின் மகள் சீரியல் கில்லரான கதை - ஒரு விறுவிறு வரலாறு

ஒரு 11 வயது சிறுமி, இரண்டு சிறுவர்களை துடிதுடிக்க கழுத்தை நெறித்து கொலை செய்தார் என்ற செய்தி உலகை உலுக்கியது. யார் இந்த மேரி பெல்? இவரது மனதில் கொடூரம் இந்த அளவுக்கு ஆட்கொள்ள என்ன காரணம்?
Mary Bell
Mary BellTwitter

மேரி பெல் என்ற 11 வயது சிறுமி, 1968ல் செய்த இரட்டைக் கொலைக்காக அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் வெறும் 12 ஆண்டுகளில் அவரது தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளிவந்தார். அதன் பின் கடைசி காலம் வரை மறைந்தே வாழ்ந்து, தான் செய்த குற்றத்திற்காக வருந்தி உயிர் நீத்தார்.

ஆனால், ஒரு சமயத்தில், மேரி பெல், தான் செய்த இரண்டு கொலைகளுக்காக வருந்தியதில்லை எனவும் மரணமும் வலியும் அவளுடைய நண்பர்களாக இருந்தன எனவும் தி கார்டியன் தளம் கூறுகிறது.

யார் இந்த மேரி பெல்? இவரது மனதில் கொடூரம் இந்த அளவுக்கு ஆட்கொள்ள என்ன காரணம்?

மேரியின் குழந்தைப்பருவம்:

மே 26 1957ல் பிறந்தார் மேரி பெல். இவரது தாயின் பெயர் பெட்டி மெக்கிரிக்கெட். பாலியல் தொழிலாளியாக இருந்த பெட்டி, மேரிய பெற்றெடுத்தபோது அவருக்கு வயது 16 தான்!

குழந்தையை பார்த்து பெட்டி பயந்ததாகவும் அதை தன்னிடம் இருந்து எடுத்துசென்றுவிடும்படி மருத்துவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் குழந்தையை தாயுடனே விட்டு சென்றனர் மருத்துவர்கள். ஆனால், பெட்டியோ, வேலை நிமித்தமாக எப்போதும் பயணம் செய்து வந்துள்ளார். குழந்தையுடன் நேரம் செலவழிக்கவில்லை. குழந்தை மேரியுடன் இருந்த ஒரு சில சமயங்களிலும் அவளை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

ஒரு முறை, பெட்டி தனது மகளை வேறொரு பெண்ணிடம் தத்து கொடுக்க முயற்சித்துள்ளார். இதனை கவனித்த பெட்டியின் சகோதரி, குழந்தையை மீட்டுள்ளார்.

இப்படி பல முறை பெட்டி, தன் மகள் மேரியை பிரிய முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிவராத ரகசியங்கள்:

சிறு வயதிலிருந்தே தனது தாயிடம் இருந்து மேரிக்கு தேவையான அன்பும் அரவணைப்பும் கிடைக்கவில்லை. மாறாக, மேரியின் தாய் கொடுமைப்படுத்தியது அவள் மனதில் ஆழமாக பதிவாகியிருந்தது.

தன் சொந்த தாயே தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்து சித்திரவதை செய்தது, மேரி சந்தித்த இரண்டாவது கொடுமை.

மூன்றாவதாக, மேரிக்கு 5 வயது மட்டுமே இருந்தபோது, அவளது தோழி ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்ததை அவள் கண்ணார பார்த்திருக்கிறாள்.

இந்த சம்பவங்கள், மேரியின் மனதில் நீங்கா வடுவாகியிருந்தது. இதுவே மேரி மற்ற குழந்தைகளை போல அல்லாமல் ஒரு விசித்திரமான குணாதிசியம் உள்ள குழந்தையாக அவளை உருவாக்கியது. தனிமையை விரும்பிய மேரியின் மனதில், இன்னும் வெளிவராத சில இருண்ட ரகசியங்கள் ஒளிந்திருந்தன.

Mary Bell
Holocaust என்றால் என்ன? - நடுங்க வைக்கும் ஒரு பயணம்

முதல் கொலை:

மேரியின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் வரத் தொடங்கின. 3 வயது குழந்தை ஒன்று மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டதும், இன்னும் சில குழந்தைகளின் கழுத்தை நெறிக்க மேரி முயற்சித்ததாகவும் அவள் மீது புகார்கள் எழுந்தன.

மே 25, மேரிக்கு 11 வயது நிறைவடைய ஒரு நாள் முன், மேரி முதல் கொலையை செய்தாள். மார்டின் பிரௌன் என்ற 4 வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்தாள் மேரி. இங்கிலாந்தின் ஸ்காட்ஸ்வுட்டில் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த ஒரு வீட்டில் அந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொலையை செய்த போது மேரியின் தோழி நார்மா என்ற பெண்ணும் அவளுடன் இருந்தாள்

மற்ற சில குழந்தைகள் அந்த வீட்டின் பக்கம் விளையாட சென்றபோது அங்கு ஒரு குழந்தையின் பிணம் கிடப்பதை பார்த்து அலறியடித்து ஓடினர்.

விஷயம் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்து கிடந்த மார்ட்டினின் உடலில் சிறிய அளவு ரத்தக்கறை இருந்தது. ஆனால், அவன் கொலை செய்யப்பட்டதற்கான வேறு எந்த அடையாளமும் இல்லை.

அவனது உடலுக்கு அருகில் மாத்திரை பாட்டில் இருந்ததை கவனித்த போலீசார், குழந்தை மாத்திரைகளை சாப்பிட்டு இறந்திருக்கலாம் எனவும் இதனை விபத்து எனக் கூறியும் வழக்கை முடித்தனர்.

இரண்டாவது கொலை:

முதல் கொலை செய்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஜூலை மாதம் மேரி இரண்டாவது கொலையை செய்தாள். இம்முறையும் நார்மா இந்த கொலையில் ஈடுப்பட்டாள்.

3 வயதான ப்ரையன் ஹோவ் என்ற குழந்தையை இந்த இருவரும் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். அதன் பிறகு, கத்திரிக்கோலை வைத்து தொடைப்பகுதியை கிழித்திருந்தாள் மேரி

இந்த முறையும் கொலை செய்துவிட்டு அமைதியாக இருவரும் வீடு திரும்பினர். பின்னர் ப்ரையனின் சகோதரி அவனை தேடிக்கொண்டிருக்கும்போது இருவரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

இறந்த ப்ரையனின் உடல் கிடைத்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவதாக ஒரு குழந்தை அதே ஊரில், இரண்டு மாத இடைவெளியில் இறப்பது சந்தேகங்களை எழுப்பியது.

Mary Bell
பசுமை வீடுகள்: புல்வெளியே கூரைகளாய் - ஆஹா, இப்படி வீடுகளா? - க்யூட் ஸ்டோரி

பிடிபட்ட கொலையாளிகள்:

ப்ரையன் இறந்த பிறகு, அவனது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. குழந்தையின் மார்பில் M என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், கொலையாளி ஒரு குழந்தையாக இருக்கலாம் என்றும் பின் குறிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளை விசாரிக்க தொடங்கியது காவல்துறை. நார்மா மற்றும் மேரி சற்றே வித்தியாசமாக நடந்துகொண்டதில் சந்தேகங்கள் வலுப்பட்டன.

மேரியிடம், மீண்டும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவர், ப்ரையன் இறந்த நாளன்று ஒரு 8 வயது சிறுவன் அவனை தாக்கியதை தான் பார்த்ததாகவும், அவனது கையில் ஒரு கத்திர்க்கோல் இருந்ததாகவும் அவள் தெரிவித்தாள்.

இது தான் மேரிக்கு பாதகமாக அமைந்தது. காரணம், ப்ரையனின் உடலில் கத்திரியால் கொய்யப்பட்ட கீரல்கள் இருந்தது ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் தெரிவிக்கப்படவில்லை.

சிறை:

வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. நார்மா தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டாள். மேரியோ, அவள் செய்த கொலைக்கு வருந்தவும் இல்லை, மாறாக நார்மா மீது பழி சுமத்தவும் திட்டமிட்டிருந்தாள்.

விசாரணையின் போது, மேரி கொலைகளைச் செய்ததற்கான காரணம் " மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்திற்காக மட்டுமே" என்று வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நார்மா சூழ்நிலைக் குற்றவாளியாக கருதப்பட்டு விடுவிக்கப்பட்டார். மேரிக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

12 ஆண்டுகளில் முடிந்த தண்டனைக்காலம்:

உளவியல் ரீதியாக மேரி பாதிக்கப்பட்டிருப்பதாக வாதிக்கப்பட்டு, அவளுக்கு முறையான உளவியல் சிகிச்சை வழங்கப்பட்டது. இதன் விளைவாக, 12 ஆண்டுகளில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் மேரி பெல்.

புதிய அடையாளங்களுடன் வாழத் தொடங்கினார் மேரி. வாழ்நாள் முழுவதும் வெளி உலகுக்கு இவர் யார் என்பதை தெரியப்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது

Mary Bell
Oxford முதல் Cambridge வரை: உலகின் பழமையான பல்கலைக்கழகங்கள் - இப்போதைய தரம் என்ன?

புத்தகமாக மாறிய மேரியின் கதை:

1984ல் மேரிக்கு முதல் குழந்தை பிறந்தது. தன் முந்தைய வாழ்க்கையை பற்றி எதுவும் கூறாமல் மகளை வளர்த்து வந்தார் மேரி.

ஆனால், 1998ல் கீதா செரினி என்ற எழுத்தாளர் மேரியின் கதையை புத்தகமாக எழுத விரும்பினார்.

Cries Unheard: Why Children Kill - The Story of Mary Bell என்ற தலைப்பில் அந்த புத்தகம் வெளியானது. அப்போது தான் மேரியின் மகளுக்கு தன் தாய் குறித்த இருண்ட ரகசியம் தெரியவந்தது.

புத்தகம் வெளியானதில், மேரியின் இருப்பிடம் மீண்டும் ஊடங்களுக்கு தெரியவரவே, பலரும் அவரை பற்றி செய்திகள் வெளியிட மேரியை அணுக தொடங்கினர்.

மக்களின் கவனம் தன் மீதும் தன் மகள் மீதும் விழவேண்டாம் என நினைத்த மேரி மீண்டும் புதிய அடையாளங்களுடன் மற்றொரு இடத்தில், புதிய வாழ்க்கையை தொடங்கினார்.

வாழ்நாள் முழுக்க மறைந்து வாழ அனுமதி தரவேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தை அணுகியதுமேரியின் தரப்பு.

அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. 1995ல் மேரி பெல் உயிரிழந்தார். தன் வாழ்வின் கடைசி நாட்களில் மேரி அவர் செய்த கொலைகளுக்காக வருந்தியதாக மேரியின் மகள் தெரிவித்தார்.

Mary Bell
Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் வினோத நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com