ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குநரான ஜேம்ஸ் கேன்மரான் இயக்கிய அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் உலகம் முழுவதும் 4,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது.
இதன் முதல் படமான அவதார் 11 ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் கேமரான் சிறந்த திரைப்படங்களில் பிரமாண்ட காட்சிகளை உருவாக்குவதற்கு அதிகம் மெனக்கெடுவர்
இப்போது அவதார் படத்தின் மீது அரசியல் விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன.
குறிப்பாக அமெரிக்க பூர்வ குடி மக்கள், மாவோரி மக்கள், உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களும் பழங்குடியின செயற்பாட்டாளர்களும் ஜேம்ஸ் கேமரானுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இவற்றையும் படியுங்கள்
"நாங்கள் இந்துக்கள் அல்ல" - பழங்குடி மக்கள் கிளர்ச்சி செய்வது ஏன்?
26 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த பழங்குடி இனத்தின் கடைசி மனிதன் காலமானார் - நெகிழ்ச்சி கதை
பிர்சா முண்டா : உலகம் கொண்டாட வேண்டிய ஒரு நிஜ நாயகன் குறித்த சில தகவல்கள்
பூமியில் இருந்து தனியார் ராணுவம் ஒன்று Unobtanium என்ற கனிமத்துக்காக பண்டோரா என்ற கிரகத்துக்கு செல்கின்றனர்.
பண்டோராவில் வாழும் நாவி மக்கள் நீல நிற தோலும் ஒல்லியான தேகமும் கொண்டு மிகவும் உயரமானவர்களாக இருக்கின்றனர்.
அவர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
கனிமத்தை எடுக்க நாவி மக்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்ட நிறுவனம் ஒன்று அவர்களை குறித்து தெரிந்துகொள்ள ஜேக் சல்லி என்ற இளைஞனை நாவி மக்களுடன் வாழ அனுப்புகின்றனர்.
தொழில்நுட்பத்தின் மூலம் ஜேக் ஒரு நாவியைப் போன்ற உடலுடனே அங்கு செல்கிறார்.
ஜேக், நெய்திரி என்ற நாவி பெண்ணுடன் காதல் கொண்டு அவர்களில் ஒருவனாக மாறுகிறார்.
நாவி மக்களை அளிக்க மனிதர்கள் அதிநவீன ஆயுதங்களுடன் நுழையும் போது ஜேக் சல்லி நாவியாக இருந்து அவர்களை எதிர்த்து போரிடுகிறார்.
முடிவில் நாவிகள் வெற்றி பெறுவது முதல் பகுதியின் கதை.
முதல் பகுதியில் தோல்வியைத் தழுவி இறந்த 'மனித ராணுவ’ தலைவனின் ( வில்லன்) மூளை மற்றொரு நாவி உடலில் வைக்கப்பட்டு, அவர் மீண்டும் கதாநாயகனான ஜேக்கை தேடுவது இரண்டாவது பகுதி.
இரண்டாம் பகுதியில் மனிதர்கள் பெரும் படையுடன் வந்து நாவிகளை அழிக்க முற்படும் போது கதாநாயகனான ஜேக் முன்னின்று நாவிகளை காப்பாற்றுகிறார்.
முதலில் அவதார் வெறும் கதை மட்டுமல்ல அது நுணுக்கமான அரசியல் குறியீடுகளக் கொண்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரானே ஒரு நேர்காணலில், " அவதார், அமெரிக்க பூர்வகுடி மக்களுக்கு ஐரோப்பியர்களால் இழைக்கப்பட்ட அநீதி குறித்து பேசும் திரைப்படம்" என்றே கூறியிருக்கிறார்.
அவதார் ஐரோப்பியர்களின் கைகளால் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன்னிலைப்படுத்துவது ஒரு நல்ல விஷயமாக இருக்க வேண்டும் தானே?
ஆனால் இல்லை என்கின்றனர் பழங்குடி செயற்பாட்டாளர்கள்.
கறுப்பின மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடூரங்களை வெள்ளையர்கள் நிகழ்த்தும் போது அவர்களை வீழ்த்துவதும் ஒரு வெள்ளையனாக தான் இருக்க வேண்டுமா?
அவதார் திரைப்படங்கள், "இனவெறி மற்றும் பேராசை மோசமானது, இயற்கையுடன் நெருக்கமாக இருங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்" என்ற கருத்துக்களை கூறுவதாகவே நமக்கு தெரிகிறது.
மேலும், "இயற்கை உலகம் பாதுகாக்கப்பட வேண்டும், பழங்குடியினர் மற்றும் கறுப்பின மக்களின் உரிமைகள் ஐரோப்பியர்களால் பறிக்கப்பட கூடாது. அவர்களின் நிலம் திருடப்பட்டிருக்கக் கூடாது." என ஜேம்ஸ் கேமரான் கூறவருவதாக புரிந்துகொள்கிறோம்.
பூர்வீக அமெரிக்கர்களும், பழங்குடி மக்களும் இந்த படத்தில் வேறொரு பார்வையை முன்வைக்கின்றனர்.
வெள்ளைக்காரர்களின் குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக இந்த அரை பில்லியன் டாலர் திரைப்படம் எடுக்கப்படவில்லை.
ஐரோப்பியர்களுக்கு எதிராக பழங்குடி மக்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த கதைக்கு ஜேக் என்ற இளைஞனேத் தேவையில்லை.
ஒரு நாவி இளைஞனை ஹீரோவாக கொண்டு இந்த படத்தை எடுத்திருக்க முடியும். அப்படி எடுத்திருந்தாலும் இந்த மூல கதையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.
ஆனால் இந்த வெள்ளைக்கார இளைஞன் வேறு காரணத்துக்காக இந்த கதையில் இடம் பெறுகிறார்.
வெறும் சில மாதங்களே நாவியாக வாழும் இவர் மொத்த நாவி படையையும் வழிநடத்துவது மிக அபத்தமானது என்கின்றனர்.
எங்களுக்கு தலைமையாக இருக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் எங்கள் தலைவர்கள் அல்ல. நீங்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். எங்கள் கலாச்சாரத்துக்கும் நிலத்துக்கும் விருந்தாளிகள். அப்படி நடந்துகொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் இதற்கு White Savior Complex என்று பெயர்.
கறுப்பின மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடூரங்களை வெள்ளையர்கள் நிகழ்த்தும் போது அவர்களை வீழ்த்துவதும் ஒரு வெள்ளையனாக தான் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்புகின்றனர்.
மேலும் இந்த திரைப்படத்தில் நாவிகளை சித்தரிக்க அமெரிக்க மற்றும் நியூசிலாந்து பூர்வகுடி மக்களின் கலாச்சாரத்தை பயன்படுத்தியதும் சர்ச்சையாகியிருக்கிறது.
அவதார் திரைப்படத்தை நாம் புறக்கணிக்க வேண்டும் என வெளிப்படையான கருத்தை முன்வைத்துள்ளார் அமெரிக்க பூர்வகுடி செயற்பாட்டாளரான Yuè Begay.
அவரது பதிவில், "ஏலியன்களாக கறுப்பின மக்களையும் பூர்வகுடிகளையும் சித்தரிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. திரையில் வரும் முகங்களும் குரல்களும் நம்மை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
நமது துன்பங்களையும் காயங்களையும் வெளிப்படுத்துவதில் நாம் நிபுணர்கள்.
ஐரோப்பியர்களை எதிர்த்து வெற்றி பெற்று இன்றும் தங்களது கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காத மக்கள் இங்கு இருக்கின்றனர். ஏன் அவர்களைப் பற்றி காட்டக் கூடாது.
ஆனால் நீங்கள் காலனித்துவத்தை புனிதமாக்கிக்கொண்டே இருக்கிறீர்கள். வெள்ளையர்களை பழங்குடி மக்களுக்கு வேற்றுகிரவாசிகளாக காட்டியது காலணித்துவம்.
கறுப்பின, பழங்குடி நிபுணர்களை நீங்கள் எழுதும் போது ஆலோசகர்களாக எடுத்துக்கொள்ளுங்கள். எங்களை வழி நடத்த விடுங்கள்.
எங்களுக்கு தலைமையாக இருக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் எங்கள் தலைவர்கள் அல்ல. நீங்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். எங்கள் கலாச்சாரத்துக்கும் நிலத்துக்கும் விருந்தாளிகள். அப்படி நடந்துகொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust