Nayanthara : சினிமாவை தவிர நயன்தாரா செய்யும் பிசினஸ்கள் என்ன? சொத்து மதிப்பு தெரியுமா?

சினிமா மட்டுமல்லாமல் தொழில்துறையிலும் தன்னை மெருகேற்றி வருகிறார் நயன்தாரா. அப்படி நயன்தாராவுக்குச் சொந்தமான ஆடம்பரமான சொத்துக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Nayanthara : சினிமாவை தவிர நயன்தாரா செய்யும் பிசினஸ்கள் என்ன? நடிகையின் சொத்து மதிப்பு?
Nayanthara : சினிமாவை தவிர நயன்தாரா செய்யும் பிசினஸ்கள் என்ன? நடிகையின் சொத்து மதிப்பு? Twitter

லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது இவர் பாலிவுட்டில் அறிமுகமாகிருக்கிறார். தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சினிமா மட்டுமல்லாமல் தொழில்துறையிலும் தன்னை மெருகேற்றி வருகிறார் நயன்தாரா. அப்படி நயன்தாராவுக்குச் சொந்தமான ஆடம்பரமான சொத்துக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தனியார் ஜெட்

நயன்தாரா தனியார் ஜெட் விமானம் வைத்திருக்கிறார். வேலை நிமித்தம் அடிக்கடி அதில் பயணம் செய்வதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொச்சின், ஹைதராபாத், மும்பை பயணத்திற்கு இதை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

வீடு

நயன்தாரா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கணவன் மற்றும் இரண்டு மகன்களுடன் வீட்டிலேயே நேரத்தை செலவிடுகிறார். சென்னையில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை வைத்திருக்கிறார். இந்த அபார்ட்மெண்ட் தவிர, நடிகைக்கு சென்னையில் ஒரு தனி வீடும் உள்ளது. அதுமட்டுமின்றி, கேரளா, ஹைதராபாத் மற்றும் மும்பையிலும் சில சொகுசு வீடுகளை வைத்திருக்கிறார்.

கார் கலெக்‌ஷன்

நயன்தாரா சில சொகுசு கார்களை வைத்திருக்கிறார். நடிகையிடம் BMW 5s சீரிஸ் உள்ளது. ஒரு Mercedes GLS 350 D, ஃபோர்டு எண்டெவர், ஒரு BMW 7 சீரிஸ், இன்னோவா கிரிஸ்டா போன்ற கார்கள் உள்ளன. அவர் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு 5 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நயன்தாராவின் பிறந்த நாளுக்கு 2.69 கோடி மதிப்புள்ள Mercedes Maybach காரை பரிசாக விக்னேஷ் சிவன் வழங்கினார்.

ஸ்கின் கேர் நிறுவனம்

நயன்தாரா தனது பிசினஸ் பார்ட்னர் மற்றும் நண்பருடன் இணைந்து ஸ்கின் கேர் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். லிப் பாம் நிறுவனம் 2021ல் தொடங்கப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட லிப் பாம் வகைகளைக் கொண்ட முதல் பெரிய பிராண்ட் எனவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் 9Skin என்ற பியூட்டி புராடெக்ட் நிறுவனத்தை தொடங்கினார். Femi9 என்ற நிறுவனமும் நயன்தாராவுக்கு சொந்தமானதாகும்.

தயாரிப்பு நிறுவனம்

கோலிவுட்டில் நயன்தாரா வெறும் நடிகை மட்டுமல்ல. அவர் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஒரு சில வெற்றிப் படங்களைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார். இந்நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.50 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் 2021 முதல் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கியது.

Nayanthara : சினிமாவை தவிர நயன்தாரா செய்யும் பிசினஸ்கள் என்ன? நடிகையின் சொத்து மதிப்பு?
Nayanthara: திருப்பதியில் காலணி அணிந்தது முதல் குழந்தை பெற்றது வரை- நடிகையின் 5 சர்ச்சைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com