Nayanthara-Vignesh: இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்த தம்பதி - என்ன அர்த்தம் தெரியுமா?

தங்களது குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்களை சூட்டியுள்ளனர் தம்பதியினர். தங்கள் மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் என் சிவன் - உலக் தெய்வீக் என் சிவன்” என பெயரிட்டுள்ளனர்.
நயன் - விக்கி
நயன் - விக்கிட்விட்டர்
Published on

தங்களது இரட்டையர்களுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் - உலக் தெய்வீக் என் சிவன் என பெயரிட்டுள்ளனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி.

பல வருடங்களாக காதலித்து, கடந்த ஜூன் 2022 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் செய்துகொண்டனர் . அதே ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக தன் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார் விக்கி. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், தங்களது குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்களை சூட்டியுள்ளனர் தம்பதியினர். தங்கள் மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் என் சிவன் - உலக் தெய்வீக் என் சிவன்” என பெயரிட்டுள்ளனர்.

உயிர் உலகம் என்ற தமிழ் பெயர்கள் புரிந்தாலும், ருத்ரோனில் - தெய்வீக் என்ற சொற்களின் அர்த்தம் என்னவென்று கமெண்ட் செக்‌ஷனில் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

ருத்ரோனில் என்பது சிவ பெருமானின் மறுபெயராகும். இது முழுமையான நம்பிக்கையையும் குறிக்கிறது. தெய்விக் என்பதன் அர்த்தம் தெய்வீகம் அல்லது தெய்வத்தை குறிக்கும் சொல்லாகிறது.

மேலும் N என்ற எழுத்து உலகின் தலைச்சிறந்த தாயை (நயன்தாராவை) குறிக்கிறது

நயன் - விக்கி
நயன்தாரா - விக்னேஷ் சிவன் : வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றனரா? சட்டம் சொல்வது என்ன?

குழந்தைகள் பிறந்த செய்தியை உலகுக்கு அறிவித்த அன்றே ”எங்கள் உயிர் மற்றும் உலக்-கிற்கு உங்களது ஆசிகள் தேவை” என கேப்ஷனில் பதிவிட்டிருந்தார் விக்கி. அப்போது அந்த பெயர்கள் பெரிதாக கவனிக்கப்படவில்லை என்றாலும், தற்போது குழந்தைகளின் பெயர்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

திரையுலகினர் விக்கி - நயன் தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் கூட தனது ட்விட்டர் கணக்கு பெயரை Vignesh ShivN என வைத்துள்ளது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

திருமணமான 4 மாதங்கள் கழிந்து, வாடகை தாய் மூலமாக குழந்தைகள் பெற்றதாக நட்சத்திர தம்பதி கூறியது, பெரும் சர்ச்சையானது. காரணம் இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற சில விதிமுறைகள் உள்ளன.

இவர்களுக்கு ஜூன் மாதமே திருமணமான நிலையில், அக்டோபர் மாதம் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தது பேசுபொருளானது.

ஆனால், ஆறு ஆண்டுகள் முன்னரே பதிவு திருமணம் செய்து குழந்தை பெற சட்டப்பூர்வமாக ஏற்பாடுகள் செய்ததாக விக்கி நயன் தரப்பில் தெரிவித்தனர்.

நயன் - விக்கி
நயன்தாரா - விக்னேஷ் சிவன் : இரட்டை குழந்தைகளுடன் திபாவளி வாழ்த்து சொன்ன தம்பதி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com