ஆனந்த விகடன் இதழில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் தொடர் நீரதிகாரம். இந்த நவீன யுகத்தில் வார இதழில் 100 வாரங்கள் ஒரு தொடர் மக்கள் மனதைக் கட்டிப்போடுவது எளிதான காரியமில்லை என்பதை நாம் அறிவோம்.
இந்த மாயாஜாலத்தில் மிகச் சிறப்பாக நடத்திக்காட்டியுள்ளார் எழுத்தாளர் அ.வெண்ணிலா. ஆசிரியரான இவர் கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். 1997ம் ஆண்டு இவரது பிருந்தாவும் இளம்பருவத்து என்ற முதல் சிறுகதைத் தொகுதி ஆனந்த விகடன் வெளியீடாக வந்தது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய சூழலில் பேசப்படும் ஆளுமையாக நிலைத்திருக்கிறார் அ.வெண்ணிலா. அவரது நீரதிகாரம் தொடர் இக்காலத்து வாசகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளதில் ஆச்சரியமேதும் இல்லை.
நீரதிகாரம் தொடர் பிரிட்ரிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணையின் வரலாற்றை ஒட்டி எழுதப்பட்டுள்ளது.
அதுநாள் வரை ஒவ்வொரு ஆண்டும் பஞ்சத்தில் பல உயிர்களை பறிகொடுத்துக்கொண்டிருந்த தென் தமிழக மக்களின் தாகம் தீர்க்க பெரியாறு திட்டம் கையில் எடுக்கப்படுகிறது.
அதன் தலைவரான பென்னி குயிக் சந்தித்த சவால்கள் என்ன? பிரிட்டிஷ் அரசு மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தான் என அரசுகளின் அழுத்தத்தை அவர் எப்படி எதிர்கொண்டார்? மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளுக்கு நடுவில் வேலைகளை செய்வது எத்தனை சவாலானது, அங்கு பணியாற்றிய தமிழர்களின் நிலை எப்படியிருந்தது? 1800 அடி உயரத்துக்கு பொருட்களை எடுத்துச்சென்ற சவால், கண்முன்னே உயிரை விடும் சக மனிதர்கள் என பல விஷயங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார் அ.வெண்ணிலா.
எப்போது புத்தகமாக வரும் என இப்போதே வாசகர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு பல தரப்பு வாசகர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது நீரதிகாரம்.
இப்போது 100வது பகுதியில் அடியெடுத்து வைக்கும் நீரதிகாரம் கொண்டாட்டத்தில் நீங்களும் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள, வாசகர்கள் 044 66802980, 044 66802907 ஆகிய எண்களில் அழைத்து முன்பதிவு செய்யலாம்.
சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மு.ராஜேந்திரன், எழுத்தாளரும் இயக்குநருமான பாஸ்கர் சக்தி, எழுத்தாளரும் இயக்குநருமான மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 08.07.2023 மாலை 3 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust