நிர்வாண ஃபோட்டோ ஷுட் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரன்வீர்சிங் , யாரோ தன்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
நடிகைகள், மாடல்கள் பத்திரிகைகளுக்கு நிர்வாணமாகப் ஃபோட்டோ ஷுட் கொடுப்பது ஹாலிவுட் வட்டாரத்தில் பரவலாக நடக்கும் ஒன்று.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் எடுத்திருந்த நிர்வாண போட்டோஷுட் இணையத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
வித்தியாசமான கதாபாத்திரங்களில், தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரன்வீர். வித்தியாசமான ஆடைகள் அணிந்து விருது விழாவுக்குச் செல்வதும், போட்டோஷுட் எடுப்பதும் அவரின் வழக்கம்.
அந்த வகையில் பத்திரிகை ஒன்றுக்காக ரன்வீர் சிங் நிர்வாணமாக போட்டோஷுட் எடுத்திருந்ததும், அதற்காக பல்வேறு தரப்பினர் அவரை விமர்சித்தும் வந்தனர்.
இந்தப் புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இது கலாச்சார சீர்கேடு, ஆண் இப்படிப் புகைப்படமெடுக்கலாமா? என்றெல்லாம் கருத்துகளைச் சிலர் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தது.
இந்த புகார் குறித்து போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நிர்வாண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியான விவகாரத்தில் தனது ஃபோட்டோக்களில் ஒரு புகைப்படத்தை யாரோ மார்பிங் செய்துள்ளதாக நடிகர் ரன்வீர்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து அந்த புகைப்படத்தை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust