ஆர் ஆர் ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களுக்கு ஆஸ்கார் இல்லையா? தேர்வான குஜராத்தி திரைப்படம்

இந்த பட்டியலில் பெரும் சர்ச்சையை கிளப்பிய காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமும் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்களும் கொந்தளித்துள்ளனர்.
ஆர் ஆர் ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களுக்கு ஆஸ்கார் இல்லையா?
ஆர் ஆர் ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களுக்கு ஆஸ்கார் இல்லையா?canva
Published on

ஆஸ்கார் விருதுகளுக்கு ஒரு திரைப்படம் தேர்வானால், அதை விட பெரிய அங்கீகாரம் இல்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் தெய்வ மகன், ஹே ராம், நாயகன் முதல்,  சூரரைப் போற்று திரைப்படம் வரை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் பல காரணங்களுக்காக இந்த திரைப்படங்களுக்கு விருது கிடைக்கவில்லை. 

2008ல் வெளியான ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் 8 பிரிவிகளில் விருதுகள் வென்றது. அதில் சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடலுக்காக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு இரு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. 

தற்போது 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்திய திரைப்பட சம்மேளனம் (FFI) இந்த வருடத்திற்கான ஆஸ்கார் பரிந்துரைகளை அறிவித்தது.

ஆர் ஆர் ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களுக்கு ஆஸ்கார் இல்லையா?
ஆஸ்கார் பட்டியலில் ஜெய்பீம், மரைக்காயர்

ஆனால், இந்த பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் இல்லை.  குஜராத்தி திரைப்படமான செல்லோ ஷோ என்ற படம் 2023க்கான அதிராப்பூர்வ ஆஸ்கார் என்ட்ரி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஆங்கிலத்தின் லாஸ்ட் ஃபிலிம் ஷோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பான் நிலன் என்பவர் இயக்கிய இந்த படத்தில், பவின் ரபரி, பவேஷ் ஸ்ரீமலி ஆகியோர் நடித்துள்ளனர். 

செல்லோ ஷோ உலகளாவிய திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்றுள்ளது. இந்தியாவில் செல்லோ ஷோ திரைப்படம் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை ஆஸ்காருக்கு அனைத்து பிரிவுகளிலும் பரிசீலிக்கக் கோரிக்கை விடுத்துள்ளது படக்குழு. இத்திரைப்படத்திற்கான  அமெரிக்க வினியோகஸ்தர், வேரியண்ட் பிலிம்ஸ் தலைவர் டிலன் மார்செட்டி அகாடமியிடம் இதனை கேட்டுக் கொண்டுள்ளார். 

டிலன் கூறுகையில், "எஸ்.எஸ். ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. உலகம் முழுவதும் 140 மில்லியன் டாலருக்கும் அதிகமான வசூல் செய்த இந்தப் படம், இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும், 14 வாரங்களுக்கும் மேலாக நெட்பிளிக்ஸில் உலகளவில் டிரெண்டிங் ஆன முதல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது." என்றார்.

ஆர் ஆர் ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களுக்கு ஆஸ்கார் இல்லையா?
RRR : வாய்பிளக்க வைத்த முதல் நாள் வசூல், சாதனை படைத்த ராஜமௌலி - Box Office Collection

இதனால் அகாடமி விருதுக் குழு, மறு பரிசீலனை செய்து, ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை 2023க்கான ஆஸ்கார் விருதுகளுக்கு 'அனைத்து பிரிவுகளிலும்' தேர்ந்தெடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பட்டியலில் பெரும் சர்ச்சையை கிளப்பிய காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமும் இடம்பெறவில்லை.

இதனால் ரசிகர்களும் கொந்தளித்துள்ளனர். ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரைக்குமாறு ஆதரவு வலுத்து வருகிறது. டிவிட்டரில் #RRRforOscars டிரெண்டாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com