பரியேறும் பெருமாள்: கரண் ஜோஹரின் இந்தி ரீமேக் அறிவிப்பால் ரசிகர்கள் எரிச்சலடைவது ஏன்?
பரியேறும் பெருமாள்: கரண் ஜோஹரின் இந்தி ரீமேக் அறிவிப்பால் ரசிகர்கள் எரிச்சலடைவது ஏன்?Twitter

பரியேறும் பெருமாள்: கரண் ஜோஹரின் இந்தி ரீமேக் அறிவிப்பால் ரசிகர்கள் எரிச்சலடைவது ஏன்?

சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த ரீமேக்கை விரும்பாதது தெரிகிறது. பலரும் '#SavePariyerumPerumal From Dharma Production' என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Published on

கடந்த 2018ம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமாக வெளியானது பரியேறும் பெருமாள். சமூகத்தில் நிலவும் சாதிய பேதங்கள் குறித்துப் பேசிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

கதிர், கயல் ஆனந்தி முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாரயணனின் இசை படத்துக்கு பக்க பலமாக இருந்ததுடன் வெற்றிக்கும் வழி வகுத்தது.

சமீபத்தில் பரியேறும் பெருமாள் திரைப்படம் மீண்டும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. காரணம் இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக் பற்றிய செய்திகள் தான்.

பிரபல பாலிவுட் இயக்குநரான கரண் ஜோஹர் பரியேரும் பெருமாள் திரைப்படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதில் சித்தார்த் சதுர்வேதி மற்றும் த்ரிப்தி திர்மி முக்கிய பாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு 'தாடக் 2' எனப் பெயர்வைக்க உள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

பரியேரும் பெருமாள் பலராலும் கொண்டாடப்பட்ட படமாக இருந்தாலும் கரண் ஜோஹர் அந்த படத்தை ரீமேக் செய்வது ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த ரீமேக்கை விரும்பாதது தெரிகிறது. பலரும் '#SavePariyerumPerumal From Dharma Production' என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பரியேறும் பெருமாள்: கரண் ஜோஹரின் இந்தி ரீமேக் அறிவிப்பால் ரசிகர்கள் எரிச்சலடைவது ஏன்?
ஜெய் பீம் முதல் கர்ணன் வரை : சாதியத்தை தோலுரித்துக் காடிய தமிழ் படங்கள்!

தர்மா புரொடக்‌ஷன் கரண் ஜோஹரின் தந்தையால் நிறுவப்பட்ட தயாரிப்பு நிறுவனம். இதனை இப்போது கரன் ஜோஹர் கவனித்து வருகிறார்.

இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளார் கரண் ஜோஹர். இவரது திரைமொழியில் பரியேறும் பெருமாள் வெளியானால் மோசமான படைப்பாக இருக்கும் என்பதே சினிமா ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்த படத்தை கரண் ஜோஹர் தமிழில் இருந்ததைப் போல வலிமையான கதையாக இல்லாமல், எளிமையாக இயக்க உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பரியேறும் பெருமாள்: கரண் ஜோஹரின் இந்தி ரீமேக் அறிவிப்பால் ரசிகர்கள் எரிச்சலடைவது ஏன்?
இந்தி சினிமாவில் பார்க்க வேண்டிய 50 படங்கள்; சமுக வலைதளங்களில் வைரலாகும் மூவி கலெக்‌ஷன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com