தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சாதிக்கு எதிரான திரைப்படங்களை வெளியாகிக் கொண்டே தான் இருக்கிறது.
80களில் வெளிவந்த சிவப்பு மல்லி மற்றும் அலை ஓசை போன்றவை சாதிக்கு எதிரான முக்கியமான படங்களாக பார்த்திருந்தாலும், இந்த வகையான திரைப்படங்கள் அந்த காலத்தில் குறைவாகவே இருந்தன.
அதன் பின்னர் 1990களில் வெளிவந்த தேவர் மகன், நாட்டாமை, எஜமான் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் மேல்வகுப்பினர்களை பிரதிபலிக்கும் கதை களத்தை கொண்டிருந்தது.
சமீப காலமாக, வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் ஜாதி எதிர்ப்புக் கதைகளை முன்னுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி, காலா, அசுரன், கர்ணன் போன்ற படங்களை உருவாக்கியுள்ளனர்.
குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் போராட்டங்களை ரொம்ப எதார்த்தமாக படங்களின் மூலம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
அப்படி சாதிக்கு எதிரான வாதங்களை முன்வைத்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் இதோ!
மாரி செல்வராஜ் இயக்கி பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் பரியேறும் பெருமாள்.
படம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே , பார்வையாளர்களுக்கு கதையின் கருவை விளக்குகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
ஒடுக்கப்பட்ட சதியைச் சேர்ந்த பரியேறும் பெருமாள் சட்டக்கல்லூரியில் சேருக்கிறார். சக மாணவியான ஜோதியுடன் நட்பு வளர்கிறது. ஜோதியின் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட, அவரின் குடும்பத்தாரால் கடுமையாக தாக்கப்படுகிறார் கதிர்.
மேல் சாதியினரின் அட்டூழியங்களை தாண்டி, அவரால் சட்டப்படிப்பை தொடர முடிந்ததா? ஆனந்தியுடனான உறவு என்ன ஆனது என்பது தான் படம்.
பரியேறும் பெருமாளின் கடைசிக் காட்சி தமிழ் சினிமாவில் மிகவும் அழுத்தமான கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒன்றாகும்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் கடந்த 2019ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றப்படம் அசுரன்.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலையே ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னல்களை காட்சிகள் விவரிக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றாடப் போராட்டங்களை அழுத்தமாகவும் ரௌத்திரத்துடனும் எடுத்து சொல்கிறது அசுரன்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை படத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் வனக் காவலர் ஆகிறார்.
ஒரு அகாடமியில் என்.சி.சி பயிற்சி அளிக்கும் துருவன் (ஜெயம் ரவி), எதிர்க் கொள்ளும் சவால்களுடன் நகர்கிறது இந்த படம்.
இடஒதுக்கீடு குறித்து ஒரு தெளிவான புரிதலையும், பொதுவுடைமை கொள்கைகளையும், பொருளாதாரத்தையும், அரசியலையும் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் பேராண்மை திரைப்படம் பேசியுள்ளது.
சாதிவெறி, தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கிறது 'மனுசங்கடா' திரைப்படம்.
கடந்த 2016ம் ஆண்டு திருநாள்கொண்டசேரியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் அம்ஷன் குமார்.
தலித்துகளுக்கு எதிரான வன்முறையை மிக அழுத்தமாக பேசியிருக்கிறது இந்த படம்.
யதார்த்தத்தை அப்பட்டமான காட்சிகளால் கண்முன் நிறுத்துகிறார் இயக்குநர் அம்ஷன் குமார்.
இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேஷி நடித்த திரைப்படம் காலா.
இத்திரைப்படம் கபாலியை தொடர்ந்து ரஜினி மற்றும் ரஞ்சித்தின் இரண்டாவது கூட்டணி படமாகும்.
நிலம் உங்களுக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை என்று கார்ப்பரேட் மற்றும் அரசியல் அதிகாரத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கதை களம்
உச்ச நட்சத்திரத்தை வைத்துப் படம் எடுத்தாலும், தான் நம்பும் அரசியலை இப்படத்தில் காண்பித்து இருப்பார் இயக்குநர்.
ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையையும் வலியையும் எதார்த்தமாக பேசும் படைப்பாக மாடத்தி படம் உள்ளது.
சாதி மற்றும் ஆணாதிக்கம் இந்தியச் சமூகத்தை சிதைத்துக்கொண்டிருக்கிறது என்பதை உரக்கச் சொல்கிறது இந்த படம்.
சாதிய சமூகத்தினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என்பார் அம்பேத்கர். அவர் கூறியது எத்தனை அழுத்தமான உண்மை எனக் கூறுகிறது மாடத்தி.
பா. ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் துஷாரா விஜயன், கலையரசன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது.
காதல் என்பது ஒரு அரசியல் என்ற வசனத்திற்கேற்ப மனிதர்களுக்கிடையேயான இயற்கையான உணர்வையே போலி கவுரவம் எப்படி முறியடிக்க நினைக்கிறது என்பதுதான் 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம்.
இந்த படத்தில் வரும் நாடகக் காட்சி சாதி எதிர்ப்பின் அடிப்படையில் இயற்றப்பட்டிருக்கும்.
முக்கிய கதாப்பாத்திரமான கலையரசனின் அர்ஜுன் பாத்திரம் சாதிய மனநிலையிலிருந்து சாதிக்கு எதிரான மன நிலைக்கு திரும்புவதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust