Ponniyin Selvan: வெளியானது ஆதித்த கரிகாலனின் சோழா சோழா பாடல் | video

இத்திரைப்படத்தின் பாடல்களைத் தமிழில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் புனைந்திருக்கிறார். இது திரைப்பட பாடலாசிரியராக இவருக்கு முதல் படம்.

இயக்குநர் மணிரத்னம், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை படமாக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி இதன் முதல் பாகம் வெளியாகவுள்ளது. நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இணைந்திருக்கிறது. இத்திரைப்படம் மொத்தம் 5 மொழிகளில் வெளியாகும்


பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தின் பாடல்களைத் தமிழில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் புனைந்திருக்கிறார். இது திரைப்பட பாடலாசிரியராக இவருக்கு முதல் படம்.

கடந்த ஜூலை மாதம், வந்தியத்தேவனின் பயணப்பாடலான 'பொன்னி நதி பாக்கணுமே' பாடல் வெளியானது. இது தமிழில் 53 லட்சத்திற்கும் மேலான வியூக்களை ஒரு நாளிலேயே பெற்றிருந்தது.

தற்போது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக, 'சோழா சோழா' வெளியாகி ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறது. தமிழில் இந்த பாடலை, பாடகர்கள் சத்யபிரகாஷ், நகுல் அப்யங்கர் மற்றும் விஎம் மகாலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர்.

சோழா சோழா பாடல்
சோழா சோழா பாடல் டிவிட்டர்

இப்பாடல் ஆதித்த கரிகாலனுக்கான பாடலாக அமையும் என இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட போஸ்டரிலிருந்து தெரிய வந்தது. இன்று காலை இப்பாடலின் கிளிம்ப்ஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மானின் பாடல்கள் கேட்க கேட்க பிடித்துப்போவது போல, லூப்பில் ஒலிக்கப்போகும் அடுத்த சம்பவம் சோழா சோழா!

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் : ப்ரமோஷன்களை புறக்கணிக்கும் விக்ரம் - இது தான் காரணமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com