பொன்னியின் செல்வன் : ப்ரமோஷன்களை புறக்கணிக்கும் விக்ரம் - இது தான் காரணமா?

தற்போது அடுத்ததாக, நடிகர் விக்ரமைச் சுற்றியே மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. நடிகர் விக்ரம் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படம் சம்மந்தமான நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார் என்பது தான் அந்த சர்ச்சை.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்news sense
Published on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வரும் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகவிருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம். கிட்டதட்ட மூன்று தலைமுறைகளாக, படமாக்கவேண்டும் என்ற பொன்னியின் செல்வன் கனவு தற்போது தான் நனவாகி வருகிறது.

விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Ponniyin Selvan
Ponniyin SelvanTwitter

பெரிய நடிகர்களின் படம் என்றாலே சர்ச்சைகளுக்குப் பஞ்சமிருக்காது. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியானபோது, வரலாற்றை மாற்றியுள்ளனர் என்று இயக்குநர் மணிரத்னம் மீதும், நடிகர் விக்ரம் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது.

தற்போது அடுத்ததாக, நடிகர் விக்ரமைச் சுற்றியே மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. நடிகர் விக்ரம் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படம் சம்மந்தமான நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார் என்பது தான் அடுத்த பிரச்னை.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் பொன்னி நதி : தமிழில் 53 லட்சம் வியூஸ் - மற்ற மொழிகளில் எவ்வளவு?

கடந்த மாதம் இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுவிழா பிரம்மாண்டமாக நடந்தது. இதில் நடிகர் விக்ரமை தவிர மற்ற நட்சத்திரங்கள் எல்லோரும் பங்கேற்றனர். டீசர் வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் விக்ரம் பங்குகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விக்ரம் சென்றிருந்தார்.

மேலும் கடந்த ஜூலை 31ஆம் தேதி இத்திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வுக்கும் விக்ரம் வரவில்லை. கார்த்தி, ஜெயம் ரவி, மற்றும் ஜெயராம் ஆகியோர் வந்திருந்தனர்.

பொன்னியின் செல்வன்
"பொன்னியின் செல்வன் படக்குழுவிற்காக விமானத்தை தாமதிக்க வைத்தார் தயாரிப்பாளர்" - கார்த்தி

இந்த நிகழ்ச்சி நடந்த பிறகு, இயக்குநர் கௌதம் மேனன் விக்ரமுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்ற தன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். இந்த இரண்டாவது நிகழ்வு தான் சர்ச்சையைச் சூடுபிடிக்கவைத்தது.

காரணம் இவை இரண்டுமே பொன்னியின் செல்வன் நிகழ்ச்சி நடந்த சிறிய இடைவெளியிலேயே நடந்து, அதில் விக்ரம் பங்கேற்காமலிருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் தொடர்ந்து படக்குழுவை புறக்கணித்து வருவது இவருக்கும் படக்குழுவிற்கும் ஒருவேளை ஒத்துப்போகவில்லையோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் : "இந்த படத்துக்கு ஓடிடி தான் சரி" - ராஜமௌலி கருத்து

ஆதித்த கரிகாலனாக நடிக்கும் விக்ரம் இடம்பெற்றுள்ள காட்சிகள் படத்தில் குறைக்கப்பட்டுள்ளதால் தான் விக்ரம் இவ்வாறு படக்குழுவைப் புறக்கணித்து வருகிறார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தான் காரணமா அல்லது, நிஜமாகவே இவ்விரண்டும் தன்னிச்சையாக நடந்தவை தான என்பதை சம்மந்தப்பட்டவர் தான் தெரிவுபடுத்த முடியும்.

பொன்னியின் செல்வன்
Ponniyin Selvan : பொன்னி நதி பாடல் குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்ஸ் - ஒரு அடடா தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com