Ponniyin Selvan : ஒரு Frame எழுப்பிய இரண்டு கேள்விகள் - ரசிகர்களின் குற்றச்சாட்டு என்ன?

முதல் போஸ்டரிலிருந்தே படக்குழு நாவலை சரியாக இயக்கியிருக்கிறதா? என கழுகு போல கண்காணித்து வருகின்றனர். கல்கி ரசிகர்கள்.
Ponniyin Selvan
Ponniyin SelvanTwitter
Published on

தமிழ் இலக்கிய உலகின் மைல் கல்லாக அமைந்த பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்திருக்கிறார் மணிரத்னம். தமிழ் சினிமாவின் பல இயக்குநர்கள் ஆசைப்பட்ட ஒன்று மணிரத்னத்துக்கு கிடைத்துள்ளது.

பொன்னியின் செல்வனை ஏற்கெனவே பலர் நாவல் வடிவில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலருக்கு படத்தின் கதை முழுவதுமாக தெரிந்திருக்கிறது. படத்தின் அரசியலும் நுண்மையாக கவனிக்கப்பட்டு வருகிறது.

முதல் போஸ்டரிலிருந்தே படக்குழு நாவலை சரியாக இயக்கியிருக்கிறதா? என கழுகு போல கண்காணித்து வருகின்றனர் நாவல் பிரியர்கள்.

ஆரம்பத்திலிருந்தே பல விவாதங்கள் எழுந்த போதிலும் சமீபத்தில் படக்குழு வெளியிட்ட ப்ரோமோஷன், நாவல் ரசிகர்களிடையே பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

அதாவது அந்த வீடியோவில் கதையின் நாயகர்களான வந்தியத் தேவன், ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் ஆகியோர் ஒன்றாக வருவது போல ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். ஆனால் கதையில் அப்படி ஒரு காட்சியே இருக்காது.

பொன்னியின் செல்வன்: நாவலில் ஒருவரை ஒருவர் சந்திக்காத முக்கிய கதாபாத்திரங்கள்- ஒரு சுவாரஸ்யப் பார்வை

பின்னர் எப்படி படத்தில் மட்டும் இப்படி ஒரு காட்சி எனக் கேட்கிறீர்களா?

கதையில் மிகச் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்திருப்பதாக கூறுகின்றனர் படக்குழுவினர். இந்த மாற்றங்கள் நாவல் வசித்தவர்களுக்கு ஏமாற்றமாக இல்லாமல் இருந்தால் சரி எனப் புலம்புகின்றனர்.

Ponniyin Selvan
Ponniyin Selvan : பொன்னி நதி பாடல் குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்ஸ் - ஒரு அடடா தகவல்

இந்த ஃப்ரேமில் இன்னும் ஒரு பிரச்னையும் சுட்டிக்காட்டப்படுகிறது. படத்தில் இந்த காட்சி வராததனால் இது நடக்கும் இடம் தஞ்சாவூரா? பழையறையா? கோடியக்கரையா? காஞ்சிபுரமா? இலங்கையா? என்பதுத் தெரியவில்லை. ஆனால் காலம் 10 நூற்றாண்டுகளுக்கு முன்பு என்பது மட்டும் உறுதி.

இந்த காட்சியில் பின்னணியில் ஒரு சீமைக் கருவேல மரம் தென்படும். இந்த சீமைக் கருவேல மரங்கள் பொருளாதாரக் காரணங்களுக்காக 1870ம் ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஒருவர் தனது பேஸ்புக் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மணிரத்னம் சேர்த்த ஒரே ஒரு ஃப்ரேம் இப்படி கேள்விகளை எழுப்பியிருக்கிறது. பொன்னியின் செல்வன் படம் பார்த்தபிறகு விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது.

Ponniyin Selvan
பொன்னியின் செல்வன்: படம் பார்க்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com