Power Rangers நடிகர் ஜேசன் டேவிட் ஃப்ரான்க் (49) காலமானார் - காரணம் என்ன?

'வைல்ட் ஃபோர்ஸ்,' 'டர்போ,' 'ஜியோ,' 'டைனோ தண்டர்,' 'மெகாஃபோர்ஸ்,' 'நிஞ்ஜா ஸ்டீல்,' 'ஹைப்பர்ஃபோர்ஸ், ஆகிய பவர் ரேஞ்சர்ஸ் சீரிஸ்களின் மீண்டும் இணைந்தார் ஜேசன். இதனால் பவர் ரேஞ்சர்ஸ் யூனிவர்ஸில் தவிர்க்க முடியாத பாத்திரமாக ஆனது டாமி ஆலிவர் பாத்திரம்.
Power Rangers நடிகர் ஜேசன் டேவிட் ஃப்ரான்க் (49) காலமானார் - காரணம் என்ன?
Power Rangers நடிகர் ஜேசன் டேவிட் ஃப்ரான்க் (49) காலமானார் - காரணம் என்ன?Twitter
Published on

மார்டி மார்ஃபின் முதல் டைனோ தண்டர் வரை பல பவர் ரேஞ்சர் சீரிஸ்களில் நடித்த ஜேசன் டேவிட் ஃப்ரான்க் காலமானார்.

இவரது மரணத்திற்கான காரணம் தற்கொலை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1993ம் ஆண்டு மைடி பார்ஃபின் பவர் ரேஞ்சர்ஸ் மூலமாக அறிமுகமானவர் ஜேசன். இதில் ராட்சத குற்றவாளிகளுக்கு எதிராக சண்டையிடும் பச்சை ரேஞ்சராக நடித்திருப்பார். அவரது டாமி ஆலிவர் கதாப்பாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

எல்லா 90ஸ் கிட்ஸ்களுக்கும் ஆதர்சமான நாயகன் ஒருவர் உண்டு என்றால் அது இவராகத் தான் இருக்கும். மைடி மார்ஃபின் சீரிஸில் பவர் ரேஞ்சர்களுக்கு எதிரியாக அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் கூட்டணியில் இணைவார். பின்னர் வெள்ளை ரேஞ்சராக உருவெடுத்து தலைவராவார். பவர் ரேஞ்சர் கதைகளின் சவாலான தலைவர் பாத்திரத்தை சிறப்பாக செய்தது இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகக் காரணமாக அமைந்தது.

'வைல்ட் ஃபோர்ஸ்,' 'டர்போ,' 'ஜியோ,' 'டைனோ தண்டர்,' 'மெகாஃபோர்ஸ்,' 'நிஞ்ஜா ஸ்டீல்,' 'ஹைப்பர்ஃபோர்ஸ், ஆகிய பவர் ரேஞ்சர்ஸ் சீரிஸ்களின் மீண்டும் இணைந்தார் ஜேசன். இதனால் பவர் ரேஞ்சர்ஸ் யூனிவர்ஸில் தவிர்க்க முடியாத பாத்திரமாக ஆனது டாமி ஆலிவர் பாத்திரம்.

பவர் ரேஞ்சர்ஸில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் ஜேசன் ஒரு சண்டைகாரர். மல்டிபிள் மார்ஷியல் ஆர்ட்ஸ்லில் (MMA) கைத்தேர்ந்தவர். டேக் வாண்டோ, முய் தாய், ஜூடோ, பிரேசிலியன் ஜியு-ஜிட்சு ஆகிய கலைகளை கற்றறிந்தவர்.

கடைசியாக இவர் நடித்த டைனோ தண்டர் சூப்பர் ஹிட் ஆனது. என்றாலும் அதன் பிறகு பவர் ரேஞ்சர்ஸ் வேறு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. 2008 முதல் 2010 வரை தொழில்முறை MMA சண்டைப் போட்டிகளிலும் பங்கேற்றார்.

Power Rangers நடிகர் ஜேசன் டேவிட் ஃப்ரான்க் (49) காலமானார் - காரணம் என்ன?
GTA: 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் வீடியோ கேமை ரீகிரியேட் செய்த இளைஞர்கள்- யார் இவர்கள்?

கடந்த ஆகஸ்ட் மாதம் இவரது இரண்டாவது மனைவி விவாகரத்து கோரியது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மூன்று பேர் முதல் மனைவியின் குழந்தைகள். கடந்த 19ம் தேதி 49 வயதிலேயே இவர் உயிரிழந்தார். தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Power Rangers நடிகர் ஜேசன் டேவிட் ஃப்ரான்க் (49) காலமானார் - காரணம் என்ன?
FIFA உலக கோப்பை 2022 : பெருமைக்கு எருமை மேய்ப்பதா? கத்தார் சந்திக்கும் சர்ச்சைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com