பிரியா பவானி சங்கர் முதல் பரோட்டா சூரி வரை: ஹோட்டல் வைத்திருக்கும் 6 பிரபலங்கள்

பிரபலங்கள் கைவசம் மற்ற தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட், நக பாலீஷ் போன்ற நிறுவனங்கள் தொடங்கினாலும் சில திரைப்பிரபலங்கள் உணவகங்களில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் குறித்த தகவல்கள் இதோ!
பிரியா பவானி சங்கர் முதல் பரோட்டா சூரி வரை: ஹோட்டல் வைத்திருக்கும் 6 பிரபலங்கள்
பிரியா பவானி சங்கர் முதல் பரோட்டா சூரி வரை: ஹோட்டல் வைத்திருக்கும் 6 பிரபலங்கள் Twitter

திரைபிரபலங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பிற துறைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சினிமா வாய்ப்பு எப்போது வேண்டுமாலும் குறையலாம் என்பது தான்.

ரியல் எஸ்டேட் தொடங்கி பேஷன் நிறுவனங்கள் வரை பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இந்தியாவில் மதுபான வகைகளை இறக்குமதி செய்வதற்கும், சில்லறை விற்பனை செய்வதற்கும் அல்கோபெவ் ஸ்டார்ட்அப் கார்டெல் & பிரதர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்.

சினிமா என்பது ஒரு நிரந்தரம் இல்லாத தொழில் என்று தான் சொல்ல வேண்டும். சிலருக்கு மார்க்கெட் 10 வருடங்கள் கூட நீளூம், சிலருக்கு 1 வருடம் கூட இருக்காது, எப்போது ஏறும், இறங்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.

இதனால் பிரபலங்கள் கைவசம் மற்ற தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட், நக பாலீஷ் போன்ற நிறுவனங்கள் தொடங்கினாலும் சில திரைப்பிரபலங்கள் உணவகங்களில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் குறித்த தகவல்கள் இதோ!

ஜீவா

சென்னை தி நகரில் நடிகர் ஜீவாவுக்கு சொந்தமான One mb என்ற பிரம்மாண்ட ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் 2012 ஆம் ஆண்டு தொடங்கினாலும் இன்றும் நல்ல வருமானம் ஈட்டி வருகிறது.

பிரியா பவானி ஷங்கர்

சமீபத்தில் தான் பிரியா பவானி ஷங்கர் ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும், அதற்கு LIAM’s Diner என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

ஆர்யா

அண்ணா நகரில் தனக்கு சொந்தமாக sea shell என்ற ஹோட்டல் வைத்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார் நடிகர் ஆர்யா

கருணாஸ்

சென்னை சாலிகிராமத்தில் karunas naan என்ற உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். அவர் மனைவி கிரேஸ் கருணாஸ் சிறப்பாக சமைப்பார் என்பது குக் வித் நிகழ்ச்சி மூலமே அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆர் கே சுரேஷ்

சினிமாவை தாண்டி இவர் வேறு தொழில்களில் நிறைய முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் கேகே நகரில் வாங்க சாப்பிடலாம் என்ற ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

பிரியா பவானி சங்கர் முதல் பரோட்டா சூரி வரை: ஹோட்டல் வைத்திருக்கும் 6 பிரபலங்கள்
இந்திய உணவுகள் என நீங்கள் நினைக்கும் இவையெல்லாம் எந்த நாட்டு உணவு என்று தெரியுமா?

சூரி

சென்னை மற்றும் மதுரையில் அம்மன் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்கி சூரி நடத்தி வருகிறார்.

பிரியா பவானி சங்கர் முதல் பரோட்டா சூரி வரை: ஹோட்டல் வைத்திருக்கும் 6 பிரபலங்கள்
செட்டிநாடு எனும் ”காரைக்குடி” - உணவு, காரை வீடுகள் தவிர வேறு என்னென்ன சிறப்புகள் உள்ளது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com