செட்டிநாடு எனும் ”காரைக்குடி” - உணவு, காரை வீடுகள் தவிர வேறு என்னென்ன சிறப்புகள் உள்ளது?

காரைக்குடியின் வரலாறு குறித்து அவ்வளவாக அறியப்படவில்லை. செட்டிநாடு பகுதி என்று பரவலாக அறியப்படும் இந்த காரைக்குடி காரை வீடுகளுக்கும், செட்டிநாட்டு உணவுக்கு பிரபலமானது. வேறு என்னென்ன சிறப்புகள் இருக்கிறது இந்த காரைக்குடியில் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
செட்டிநாடு எனும் ”காரைக்குடி” பற்றி பலரும் அறியாத தகவல்கள்
செட்டிநாடு எனும் ”காரைக்குடி” பற்றி பலரும் அறியாத தகவல்கள்Twitter
Published on

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் தான் காரைக்குடி. செட்டிநாடு பகுதி என்று பரவலாக அறியப்படும் இந்த காரைக்குடி காரை வீடுகளுக்கும், செட்டிநாட்டு உணவுக்கு பிரபலமானது.

அதுமட்டுமல்லாமல், பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டாகவும் காரைக்குடி இருக்கிறது. சிறிய நகரமாக இருந்தாலும், அங்கு இருக்கும் மக்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள்.

பொதுவில் காரைக்குடியின் வரலாறு குறித்து அவ்வளவாக அறியப்படவில்லை. இங்குள்ள மிகப் பழமையான கோயில் கி.பி 1800ம் ஆண்டைச் சேர்ந்தது, அதனால் இந்நகரும், 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

வேறு என்னென்ன சிறப்புகள் இருக்கிறது இந்த காரைக்குடியில் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

செட்டிநாடு வீடுகள்

வேல் படத்தில் கூட இங்குள்ள "ஆயிரம் ஜன்னல் வீடு" இடம்பெற்றிருக்கும். இந்த வீட்டை காண பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

ஒரு வீடு மட்டும் தான் அங்கு சிறப்பா? என்று கேட்டால் அது தான் இல்லை, அங்கு இருக்கும் ஒவ்வொரு செட்டிநாட்டு வீடுகளும் அதன் கட்டிடக் கலைக்கு புகழ்பெற்றவை.

நகரத்தார் தங்கள் வீட்டு விழாக்களை வீட்டிலேயே நடத்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதனால் இவர்களின் வீடே பெரிய மண்டபம்போல் இருக்கும். இந்தக் கட்டிடக் கலை குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள், வல்லுனர்கள், ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

செட்டிநாடு எனும் ”காரைக்குடி” பற்றி பலரும் அறியாத தகவல்கள்
இந்தியாவின் Hidden Spots : நடுகாட்டில் இருக்கும் வீடுகள் த்ரில்லர் அனுபவத்தை தருமா?

வியாபாரத்தில் மேலெங்கிய குடும்பங்கள்

காரைக்குடியில் பொதுவாகவே செட்டியார் குடும்பங்கள் அதிகம் வசிப்பார்கள். இவர்கள் காரைக்குடியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தனர். இவர்கள் வணிகம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செட்டியார்கள், கல்வி நிறுவனங்கள் கட்டுவது, வங்கிகளுக்கு நிதியுதவி செய்வது, கோயில்களை நிறுவுவது, அனைத்து விசேஷங்களையும் பாரம்பரிய முறையில் கொண்டாடுவது என நகரத்தின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

ஷூட்டிங் ஸ்பாட்

காரைக்குடி, திரைப்படத்துறையினரின் விருப்பமான படப்பிடிப்புத் தலமாகவும் உள்ளது. ஏ.வி. மெய்யப்ப செட்டியார் அவர்களால் ஏ.வி.எம் ஸ்டுடியோ காரைக்குடியில் ஆரம்பிக்கப்பட்டபின், ஏராளமான தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. சிங்கம், வேல் போன்ற திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

செட்டிநாடு எனும் ”காரைக்குடி” பற்றி பலரும் அறியாத தகவல்கள்
அலாஸ்கா : இந்த ஒரு கட்டிடம்தான் முழு நகரமே; என்னென்ன வசதிகள் இருக்கிறது? - ஓர் அடடே ஸ்பாட்

செட்டிநாடு உணவு

"செட்டிநாடு" என்று பிரபலமாக அழைக்கப்படும் உள்ளூர் சமையல் பாணியின் பெயர், இந்நகரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த செட்டியார்களின் பெயரில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகள் "செட்டிநாடு" உணவு வகைகளை "ஆச்சி சமையல்" என்றே குறிப்பிடுகின்றனர்.

செட்டிநாடு மசாலாவுக்கு என்று தனி பக்குவமே இருக்கிறது. பாரம்பரிய முறைப்படி எந்த ஒரு ரெடிமேட் பொருட்களும் இல்லாமல் அந்த மசாலா தயாரிக்கப்படுகிறது. ஆச்சியின் கை பக்குவம் இருப்பதை போன்று ஒவ்வொரு உணவும் தனித்தன்மையோடு சமைக்கப்படுகிறது.

செட்டிநாடு எனும் ”காரைக்குடி” பற்றி பலரும் அறியாத தகவல்கள்
இந்திய உணவுகள் என நீங்கள் நினைக்கும் இவையெல்லாம் எந்த நாட்டு உணவு என்று தெரியுமா?

சீயம், கந்தரப்பம், மசாலாப் பணியாரம், வெள்ளீயம் பணியாரம் மற்றும் தாளிச்ச இடியாப்பம் போன்ற உள்ளூர் உணவு வகைகளை வாழ்க்கையில் ஒருமுறையாவது சுவைத்து பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் காரைக்குடியில் செட்டிநாடு ஸ்பெஷல் நொறுக்குத் தீனி வகைகள் உள்ளன.

முறுக்கு வடை, சீப்புச் சீடை, தட்டை, கருப்பட்டி பணியாரம், குழல், சீடைக்காய், அதிரசம் மற்றும் மாவு உருண்டை ஆகியவை உள்ளூரில் தயாரான நொறுக்குத் தீனி வகைகளாகும். இதனை பேக் செய்து வெளிநாட்டிற்கு எடுத்து செல்வார்கள்.

வானிலை

காரைக்குடி, வெப்பமான கோடைகள், மிதமான மழைப்பொழிவு மற்றும் குளிர்ச்சியான குளிர்காலம் ஆகிய வானிலை மாற்றங்களைக் கொண்டு விளங்குகிறது.

முக்கிய இடங்கள்

குன்றக்குடி சண்முகநாதன் திருக்கோவில்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்

கண்ணதாசன் மணிமண்டபம்

கம்பன் மணிமண்டபம்

1000 ஜன்னல்கள் வீடு

செட்டிநாடு ராஜா அரண்மனை

அரியக்குடி திருவேங்கடமுடையான் திருக்கோவில் ஆகியவை காரைக்குடியில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

செட்டிநாடு எனும் ”காரைக்குடி” பற்றி பலரும் அறியாத தகவல்கள்
இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் செல்லக்கூடிய வெளிநாட்டு இடங்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com