Priyanka Chopra: ”நான் அமெரிக்காவில் குடியேற இது தான் காரணம்” மனம் திறந்த பாலிவுட் நடிகை

இந்தியில் இவருக்கு நல்ல முக்கியத்துவம் இருந்த அதே நேரத்தில் ஹாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்தார் நடிகை பிரியங்கா. குவாண்டிக்கோ என்கிற ஆங்கில தொலைக்காட்சி சீரீஸ் மூலம் ஹாலிவுட்டிற்குள் நுழைந்தார்.
Priyanka Chopra:
Priyanka Chopra:ட்விட்டர்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தான் அமெரிக்காவுக்கு ஏன் குடிபெயர்ந்தார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். அவர் தெரிவித்த காரணம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. விஜய்யுடன் நடித்த தமிழன் திரைப்படத்திற்கு பின்னர் இவர் தமிழில் நடிக்கவில்லை. ஆனால், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தார்.

நடிப்பு மட்டுமல்லாது சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார் பிரியங்கா. தமிழன் படத்தில் விஜய்யுடன் இணைந்து “உள்ளத்தை கிள்ளாதே” பாடலை இவர் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் இவருக்கு நல்ல முக்கியத்துவம் இருந்த அதே நேரத்தில் ஹாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்தார் நடிகை பிரியங்கா. குவாண்டிக்கோ என்கிற ஆங்கில தொலைக்காட்சி சீரீஸ் மூலம் ஹாலிவுட்டிற்குள் நுழைந்தார்.

குவாண்டிக்கோ தொடர் மற்றும் இவரது இண்டிபெண்டெண்ட் பாடல்கள் சில இவருக்கு ஹாலிவுட்டில் வாய்ப்புகளை அதிகப்படுத்தியது. சமீபத்தில், ஆங்கில பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய பிரியங்கா, தான் பாலிவுட்டை புறக்கணித்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் தனக்கும் “குறிப்பிட்ட சிலருக்கும்” பிரச்னைகள் இருந்ததாகவும், அதனால் தான் ஓரங்கட்டப்பட்டதாகவும் பிரியங்கா அப்பேட்டியில் பேசியுள்ளார். பகையின் காரணமாக தனது படவாய்ப்புகள் பறிக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.

Priyanka Chopra:
மாஸ் ஹீரோவாக நடிக்க தன்னம்பிக்கை வேண்டும்... நடிகர் யாஷ் ஓபன் டாக்

அந்த சமயத்தில் தான் அவருக்கு ஹாலிவுட் வாய்ப்புகள் கதவை தட்டியுள்ளன. தற்போது பிரியங்கா சோப்ராவின் மேலாளராக இருக்கும் அஞ்சுளா ஆச்சாரியா, அவரது பாடல்களை கேட்டுவிட்டு, ஹாலிவுட்டில் இசையுலகில் கரியரை உருவாக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதனை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. ”இசை என்னை மற்றொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. நான் வேண்டாம் என்று நினைத்த படங்களை நான் தைரியமாக புறக்கணித்தேன்” என்றார்.

”நான் எனது வேலையை சிறப்பாக செய்துவந்ததாலும், என் மீது அவர்களுக்கு இருந்த கோபத்தினாலும், எனது வேலையை கெடுக்கும் முயற்சிகள் என் கண் முன்னே நடந்தன. இந்த அரசியல் விளையாட்டுகள் எனக்கு பிடிக்கவில்லை”.

தற்போது சிடாடெல் என்ற வெப் சீரீசில் நடித்து முடித்துள்ளார் பிரியங்கா. இது வரும் ஏப்ரல் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

நடிகை பிரியங்கா நிக் ஜோனஸ் என்கிற பாப் பாடகரை காதலித்து மணந்தார். இவர்களுக்கு மால்டி என்கிற பெண் குழந்தை உள்ளது

Priyanka Chopra:
Anushka Shetty: "எனக்கு அரிய வகை நோய் இருக்கிறது” மனம் திறந்த நடிகை - என்ன பிரச்னை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com