Ponniyin Selvan 2: ”என்ன பதிலே இல்லை?” ட்விட்டரில் குந்தவை - வந்தியத்தேவன் ஊடல்!
Ponniyin Selvan 2: ”என்ன பதிலே இல்லை?” ட்விட்டரில் குந்தவை - வந்தியத்தேவன் ஊடல்!ட்விட்டரில்

Ponniyin Selvan2 : ”என்ன பதிலே இல்லை?” ட்விட்டரில் குந்தவை - வந்தியத்தேவன் ஊடல்!

நடிகர் கார்த்தி தனது ட்விட்டரில், “இளையபிராட்டி... ஹாய்” என ட்வீட் செய்து, த்ரிஷாவை டேக் செய்திருந்தார். வெகு நேரமாகியும் பதில் வராததால் மீண்டும் ”என்ன பதிலே இல்லை? எனக் கூறி, சோகமான இமோஜியை பகிர்ந்திருந்தார். இதனை பார்த்து பதிலளித்த நடிகை த்ரிஷா, “என்ன வாணர் குல இளவரசே?” எனக் கேட்டிருக்கிறார்.
Published on

இன்று மாலை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ள நிலையில், ட்விட்டரில் குந்தவை த்ரிஷாவுக்கு தூது அனுப்பி விளையாடிக்கொண்டிருக்கிறார் வந்தியத்தேவனான கார்த்தி!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி தமிழ் மட்டுமல்லாது உலக அளவில் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 வெளியாகவுள்ளது. இதற்கான புரொமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான “அக நக” பாடல் இன்று மாலை வெளியாகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, இளங்கோ கிருஷ்ணன் வரிகளில், சக்திஸ்ரீ கோபாலன் குரலில் பாடல் வெளியாகிறது.

இந்நிலையில், தற்போது ட்விட்டரில் சேட்டை செய்ய தொடங்கியுள்ளார் வந்தியதேவன். வரவிருக்கும் முதல் பாடல் குந்தவைக்கும் வந்தியத்தேவனுக்குமான காதல் பாடல்.

நடிகர் கார்த்தி தனது ட்விட்டரில், “இளையபிராட்டி... ஹாய்” என ட்வீட் செய்து, த்ரிஷாவை டேக் செய்திருந்தார். வெகு நேரமாகியும் பதில் வராததால் மீண்டும் ”என்ன பதிலே இல்லை? எனக் கூறி, சோகமான இமோஜியை பகிர்ந்திருக்கிறார்.

இதனை பார்த்து பதிலளித்த நடிகை த்ரிஷா, “என்ன வாணர் குல இளவரசே?” எனக் கேட்டிருக்கிறார்.

மீண்டும் கார்த்தி ”தங்கள் தரிசனம் கிடைக்குமா?” எனக் கேட்க, த்ரிஷா “யோசித்து செய்தி அனுப்புகிறேன் எனக் கூறியுள்ளார். இவர்களது ட்விட்டர் உரையாடல்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது

Ponniyin Selvan 2: ”என்ன பதிலே இல்லை?” ட்விட்டரில் குந்தவை - வந்தியத்தேவன் ஊடல்!
பொன்னியின் செல்வன்: திரையுலகின் 70 ஆண்டு கனவு; படம் வென்றதா? காரை அக்பர் விமர்சனம்

படத்தின் புரொமோஷன் பணிகளில் இதுவும் ஒன்று என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தின் முதல் பாகம் வெளியாவதற்கு முன்னரே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம் ஆகியோர் தங்களது ட்விட்டர் கனக்கில் கதாபாத்திரத்தின் பெயர்களை மாற்றிக்கொண்டனர்.

ட்விட்டரில் புரொமோஷன் வேலைகளுக்கு செல்வது குறித்து நகைச்சுவையாக டிஸ்கஸ் செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Ponniyin Selvan 2: ”என்ன பதிலே இல்லை?” ட்விட்டரில் குந்தவை - வந்தியத்தேவன் ஊடல்!
Ponniyin Selvan 2 : வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com